எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 3 பாவலர் அறிவுமதி - மணிமேகலை ஆகியோரின் செல்வன் தமிழ்த்தம்பி, பரஞ்சோதிலிங்கம் - பிரேமாவதி ஆகியோரின் செல்வி அனிதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்தம் - திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 31.8.2018 அன்று காலை 7.15 மணியளவில் சென்னை - கோயம்பேடு, ஓட்டல் ஜே.பி. (ஹோட்டல் பீகாக்)யில் நடைபெற்றது.

மணமகனின் தந்தை பாவலர் அறிவுமதிவரவேற்புரை ஆற்றினார்.

கடலூர் துறைமுகம் வழியாக நாள்தோறும் நடந்து வந்தவன் நான். எனது தந்தையார் நடராஜன் தந்தை பெரியார் தொண்டர் - கருப்புச்சட்டைக்காரர் - அந்த உணர்வில் வளர்ந்தவன் நான்.

இன்றைக்கு என் மகனின் திருமணம் அதே கடலூரைச் சார்ந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் தலைமையில் நடப்பது மகிழ்ச் சிக்கும், பெருமைக்கும் உரியது என்றார். பிரபாகரன் நினைவாக (தம்பி என்றால் அவர்தானே) மகனுக்கு தமிழ்த்தம்பி என்ற பெயர் சூட்டியதாகவும் குறிப்பிட்ட அவர் நெருக்கமான  நண்பர் குழாம்-கொள்கைக் குடும்பம் இங்கு வந்துள்ளது. மணமகள் அனித்தா ஈழத்துப் பெண். தொப்புள் கொடி உறவு தொடர்கிறது என்று கூறி அனைவரையும் வரவேற்றார்.

வாழ்க்கை இணை நல ஒப்பந் தத்தை நடத்தி வைத்த தமிழர் தலைவர் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

பொருளீட்டவில்லை பாவலர் அறிவுமதி என்று குறிப்பிட்டார். பொருள் என்பது வெறும் பணம் மட்டுமல்ல. அவர் சேர்த்து வைத் துள்ள கொள்கையை விட பெரிய சொத்து எது?

அறிவுமதியின் தந்தையார் சோனக்குப்பம் நடராசன் எனது  ஆசிரியர் ஆ.திராவிடமணியின் நெருங்கிய தோழர் --கழகச் செம்மல்.

மணமகள் ஈழத்துப்பெண் என்றபோதுஇரட்டிப்பு மகிழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் கொலோன்பல்கலைக்கழக நிகழ்ச் சிக்குச் சென்றபோது ஈழத்து மண மகன் - மணமகளுக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்ததை நினைவு கூர்ந்த மண விழாத் தலைவர் ஆசிரியர் அவர்கள் - எளிமை என்பதே வலிமையானது என்றும்,வாழ்விணையர் இரு வரும் விட்டுக்கொடுத்து போட்டி யில் முதலில் தோற்பது யார் என்பதில்முந்திக்கொள்ளவேண் டும் என்றும், எவ்வளவு தான் வாழ்வில் உய்ர்ந்தாலும் பெற் றோர்களிடம் பாசமும், அன்பும், அரவணைப்பும் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து இனமுரசு சத்யராஜ், இயக்குநர்பொன்வண்ணன்,கவி ஞர் பழனிபாரதி, ஓவியர் டிராஸ்கி மருது, இக்பால், டாக்டர் மகுடபதி, ஒளிப்பதிவாளர் சிறீ ராமுலு, தனவேலு அய்.ஏ.எஸ்., இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் மேத்தா, மணியரசன், தோழர் ஆர்.நல்லகண்ணு, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி நன்றி கூறிட காலை 7.50 மணிக்கு சிறப்பாக நிறைவு பெற்றது.

வந்திருந்த அனைவருக்கும் சிற் றுண்டி அளித்து உபசரிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திரா விட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் மண விழாவில் கலந்து கொண்டனர்.

பகுத்தறிவாளர்கள், இன உணர் வாளர்கள், கலையுலகத்தினர் வந் திருந்து வாழ்த்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner