எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விருத்தாசலம், செப். 3 விருத்தாசலம் கழக மாவட்டகலந்துரையாடல் கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் செப். 17ஆம் தேதிக்குள் 100 விடுதலை ஆண்டு சந்தா வழங்கிடவும், தந்தை பெரியார் பட ஊர்வலம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரை யாடல் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் முத்து.கதிரவன் வரவேற்புரையாற்றினார். மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணி செயலாளர் இளந் திரையன், மாநில இளைஞரணி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். அப்போது விடுதலை சந்தா வழங்குவதன் நோக்கம் குறித்தும், மாவட்டத்தில் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்.

கூட்டத்தில் திமுக தலைவர் முத்தமி ழறிஞர் கலைஞர் மறைவுக்கும், விருத் தாலம் கழக மாவட்ட அமைப்பாளர் புலவர் இளவரசன் மகன் தங்கத்துரை மறைவுக்கு இரங்கலும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டது. மேலும் 100 விடுதலை ஆண்டு சந்தா வழங்குவது. தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட ஊர்வலம் நடத்துவது, மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது. சிந்தனைப் பலகை தொடங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தசாமி, விருத்தாசலம் நகர தலைவர் சுப்பிரமணியன், நகர செயலாளர் சேகர், விருத்தாசலம் ஒன்றிய அமைப்பாளர் பாளமுருகன், வேப்பூர் வட்டார தலைவர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன், மாவட்ட மகளி ரணித் தலைவர் தமிழ்ச்செல்வன், மாணவர் கழக செயலாளர் இராமராஜ், மாவட்ட ப.க. தலைவர் பெரியர் செல்வம், கழுதுர் இளங்கோன், கம்மாபுரம் ஒன்றிய தலைவர் பாவேந்தர் விரும்பி, இளைஞரணி சிவக் குமார், உத்தண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேப்பூர் நகர தலைவர் அறிவு நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner