எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, செப்.3  மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத் தும் வகையில் மேலும் 500 அரசுப் பள்ளிகளில் “அடல் டிங்கர் லேப்’ எனும் பெயரில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

கோவை மெட்ரிக். பள்ளிகள் சங்கத்தின் கல்விக் குழு சார்பில் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் முதல்வர்கள், தலைமை ஆசிரி யர்களுக்கு விருது வழங்கும் விழா ராமநாதபுரம், அல்வேர் னியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருது களை வழங்கிப் பேசியாதவது:

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு சிறப்பான பாடத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கல்வி முறை வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 2, 3, 4, 5, 7, 8, 10, 12ஆம் வகுப்பு பாடத் திட்டங்கள் மாற்றப்பட உள்ளன. மேலும் புதிதாக 12 வகையான பாடத் திட்டங்கள் சேர்க்கப்பட உள்ளன.

12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த பாடத் திட் டங்கள் இருக்கும். இவை சேர்க்கப்பட்ட பின்னர் நமது பாடத் திட்டத்தை இந்தியாவே திரும்பிப் பார்க்கும்.

மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில் மேலும் 500 அரசுப் பள்ளிகளில் “அடல் டிங்கர் லேப்’ எனும் பெயரில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்கப்படும். இவை அடுத்த 3 மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வரும். இது போன்ற எண்ணற்ற புதுமைத் திட்டங்கள், மாற்றங்களின் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு இணை யாகத் தரம் உயர்ந்து வருகின்றன என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner