எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.3 நிகழாண்டில் மொத்தம் 5.42 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

2017 - 2018ஆம் நிதியாண்டுக் கான வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதையடுத்து, கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஏராளமானோர், நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் தங்களுடைய வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்தனர். அன்றைய தினம் மட்டும், 34.95 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஒட்டுமொத்தமாக, 2017- 2018ஆம் நிதியாண்டில் 5.42 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 70.86 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் 3.17 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப் பட்டிருந்தன.

மேலும், நிகழாண்டில் 3.37 கோடி பேர் வருமான வரி கணக்குகளை இணைய வழியில் தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டில் 2.19 கோடி பேர் இணைய வழியில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

நிகழாண்டில் உத்தேச வரி விதிப்பு திட்டத்தின் பலனடைந்த 1.17 கோடி பேர் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்துள் ளனர்.

ஆனால், இத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டில் 14.93 லட்சம் பேர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்திருந்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண் டில்  8 மடங்கு அதிகரித்துள்ளது.

வருமான வரி கணக்கை தாமதமாக செலுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கு முதல் முறையாக முடிவு செய்யப் பட்டது.

ரூபாய் நோட்டு திரும்பப் பெற்ற நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் காட்டப்படும் வருவாய் அதிகரித்துள்ளது.

முக்கியமாக, இந்த இரண்டு காரணங்களால், வருமான வரி கணக்கு செலுத்துவோரின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது என்று வருமான வரித் துறை சனிக் கிழமை வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner