எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிதம்பரம், செப்.3 சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரை யாடல் 29.8.2018 அன்று காலை 9.30 மணிக்கு பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலை மையில் மாநில இளை ஞரணி செயலாளர் இளந்திரையன் முன்னிலையில் சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.

தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது எனவும், தலைமைக் கழக கட்ட ளைக்கேற்ப 100 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என வும் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங் கோவன், மாவட்ட செய லாளர் அன்பு.சித்தார்த்தன், இணைச் செயலாளர் யாழ்திலீபன், மாவட்ட துணைச் செயலர் கா.கண்ணன், தலைமையாசிரியர் நெடு மாறன், படிப்பக செயலாளர் கோவி.சுந்தரமூர்த்தி, பெரு மாத்தூர் பழனியாண்டி, புவனகிரி ஆசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: மானமிகு சுயமரியாதைக்காரர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட திராவிட முன் னேற்றக் கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மறை விற்கு சிதம்பரம் மாவட்ட கழகம் ஆழ்ந்த இரங்கலை யும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: 20.8.2018 அன்று சென்னையில் நடை பெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை ஏற்று செயல் படுத்துவதென முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 3: அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழாவினை சிதம்பரம் கழக மாவட்டம் முழுவதும் நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது.

தீர்மானம் 4: இன உரிமை மீட்பு ஏடான விடுதலை' ஏட்டிற்கு சிதம் பரம் மாவட்டம் சார்பில் தலைமை கழகம் ஒதுக்கிய 100 சந்தாக்களை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner