எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப்.4 கருநாடக மாநிலத்தில் நடந்த நகர உள் ளாட்சித் தேர்தலில் காங்கிரசு, மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது.இதில்காங்கிரசு,மதச் சார்பற்ற ஜனதா தளம் பெரும் பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கருநாடக மாநிலத்தில் உள்ள 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த மாதம் 31- ஆம் தேதி தேர்தல் நடந்தது. 3 மாநகராட்சிகள், 29 நகர முனிசிபல் கவுன்சில்கள், 52 டவுன் பஞ்சாயத்து கவுன் சில்கள், 20 டவுன் பஞ்சாயத் துக்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் 61.51 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 2,709 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த 2,662 இடங்களுக்குத் தேர்தல் முடிவுகள் நேற்று அறி விக்கப்பட்டன.

இதில் காங்கிரசு கட்சி 982 இடங்களையும், பாஜக 929 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 373 இடங் களையும் கைப்பற்றின. சுயேச்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் ஜேடிஎஸ், காங்கிரசு கூட்டணி ஒட்டுமொத்தமாக 1,357 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதன் மூலம் மக்கள் மத்தி யில் காங்கிரசு கட்சிக்கும், மதச் சார்பற்றஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு ஆதரவு பெருகி யுள்ளதாக ஜேடிஎஸ், காங்கிரசு கட்சியின் தலைவர்கள் தெரி விக்கின்றனர்.

22 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் காங்கிரசு கட்சி கைப்பற்றியுள்ளது. பல்லாரி, பிதார், கடாக், மைசூரு, உத்தர கன்னடா, ராய்சூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் காங்கிரசு வென்றுள்ளது. வடக்கு கரு நாடகாவில் காங்கிரசு கட்சி சிறப்பான வெற்றியைப் பெற் றுள்ளது.

அதேபோலஹசன்,மாண் டியா, தும்கூரு ஆகிய மாவட் டங்களில் ஜேடிஎஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பாஜக 929 இடங்களிலும், உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களிலும் வென்றுள் ளது. 22 மாவட்டங்களில் 329 இடங்களில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner