ரிசர்வ் வங்கி அறிக்கையில் வெட்ட வெளிச்சம்!
புதுடில்லி,செப்.4வங்கிமோசடி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 2017-18 நிதியாண்டில் ரூ. 41ஆயிரம் கோடியாக அதி கரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 23 ஆயிரம் கோடியாக இருந்த, மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு தற்போது அதைவிட இரண்டு மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது. அதேபோல மோசடிக் குற்றங் களின்எண்ணிக்கையும் உயர்ந் துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரி வித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வங்கி மோசடி குற்றங்களின் எண்ணிக்கை ஆண் டுக்கு சராசரியாக 4 ஆயிரத்து 500 குற்றங்கள் என இருந்த நிலையில், இது கடந்த 2017- 18 நிதியாண்டில் 5 ஆயிரத்து 835 கோடியாக அதிகரித்துள்ளது.
வராக்கடன்அதிகரிப்பால், வங்கிகளில்தணிக்கைகள் மிகவும்கெடு பிடியாக்கப்பட் டுள்ளன என்று மோடி அரசால் கூறப்பட்டது. ஆனால், இவ் வாறு கூறியதற்குப் பிறகு, மோசடிகள் அதிகரித்துள்ளன. கடந்த நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கொண்ட மோசடிகளில் 92.9 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளில்தான் நடந்துள்ளன. தனியார்வங்கிகளில்6 சதவிகிதம்அளவிற்கேமோசடி நடந்துள்ளது.கடந்தமார்ச்31 புள்ளிவிவரப்படி,85சதவிகித மோசடிகள் பொதுத்துறை வங் கிகளிலும் 10 சதவிகிதத்துக்கும் மேலான மோசடிகள் தனியார் வங்கிகளிலும் நடந்துள்ளன. கடன் மோசடிகளில் பொத்துறை வங்கிகளில் 87 சதவிகிதமும், தனியார் வங்கிகளில் 11 சத விகிதமும் நடந்துள்ளன. போலிஆவணங்கள்,பண உத்தரவாதகடிதம்போன்றவை மூலம் மோசடிகள் நிகழ்ந்துள் ளன. மல்லையா, நீரவ் மோடி என பலரை, மோடி அரசே சத்தமில்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டது. உள்நாட்டில் இருப்பவர்களுக்கும், 6 லட்சம் கோடி ரூபாயைஅள்ளிக் கொடுத்துவிட்டு, அவற்றை வராக்கடன் ஆக்கிவிட்டது. போதாதென்று பொதுத்துறை வங்கிகளில்இருக்கும்மக்கள் பணத்தை மோசடி பேர்வழி களுக்காக சூறையாடத் துவங் கியுள்ளது.