எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிமன்றம் செல்வோம் காங்கிரஸ்

பாரிசு, செப்.4 இந்திய விமானப் படைக்கு ரபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் பிரான்ஸ் அரசுடன் ஏற்பட் டுள்ளது. இதில் அதிகளவு ஊழல் நடந் துள்ளது என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசு மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது இந்த விவகாரத்தை பிரான்ஸ் நாளிதழ்கள் புலன் விசாரணை நடத்தி வருகின்றன.  பிரான்ஸ் 24 என்ற அரசு தொலைக்காட்சியில், பிரான்ஸ் ரபேல் விமான ஒப்பந்தம் இந்தியாவில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

அதில்,ரபேல், தஸ்ஸால்ட், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை இந்திய ராணுவ துறையின் 800.7 கோடி டாலர் மதிப்பிலான திட்டங் களில் 50 சதவீதத்தை முதலீடு செய்கின்றன. ராணுவ தளவாட உற்பத்தியில் 75 ஆண் டுகள் அனுபவம் உள்ள இந்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனத் தின் அனுபவம் புறம் தள்ளப்பட்டு, மோடி அறிவிப்புக்கு 13 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு ரபேல் ஒப்பந்தத் தில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானிக்கும், மோடிக்கும் இடையிலான உறவு குறித்தும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்த லுக்கு தனியார் நன்கொடையை பாஜக அதிகளவில் பெற்றது. அவர்கள் மோடியின் முதலாளித்துவ தோழர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

59 வயதாகும் தொழிலதிபரான அனில் அம்பானி தொலைத் தொடர்பு துறையில் பல்வேறு போராட்டங்களுடன் தன்னு டைய ரிலையன்ஸ் கம்யூனிகேசனை மூடவேண்டிய நிலையில் உள்ளார்.  இந்த நிலையில் திடீரென்று விமான தொழிற் சாலை நிறுவனம் தொடங்கியுள்ளார். இதில் அவருக்கு போதிய அனுபவம் இல்லை. இந்தியாவின் இந்து தேசியவாத போக்கை தீவிரமாக கடைபிடிக்கும் மோடி யுடன்  இவருக்கு இருக்கும் இணக்கம் காரணமாகத் தான் இது நடந்துள்ளது" என்று  பிரான்ஸ் நாளிதழ்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

விதிமுறைகளை முற்றிலும் மீறிய ஒப்பந்தம்

"இந்தியாவில் விமானப்படைக்கு  126 போர் விமானங்களுக்கான தேவை இருக் கும்பட்சத்தில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து எதற்காக 36 ரபேல் போர் விமானங் களை மட்டும் வாங்க மோடி அரசு ஒப்பந்தம் செய்தது? அரசுக்கு அவசர தேவை என்றால் 126 விமானங்களையும் உடனடியாக வாங் கும்படி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதில் முதல் கட்ட மாக குறிப்பிட்ட அளவிலான விமானங் களை 2019ஆம் ஆண்டு அளிக்கப்பதாகவும், மீதமுள்ள விமானங்களை 2022ஆம் ஆண்டு அளிப்பதாகவும் ஒப்பந்தம் செய் யப்பட்டிருக்கிறது. நாட்டின் நலன்களை பற்றி சிந்திக்காமல் மோடி தனது பணக்கார நண்பருக்கு உதவுவதற்காகவே இந்த ஒப் பந்தத்தை செய்திருக்கிறார்.

ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாயில் இருந்து ஆயிரத்து 670 கோடி ரூபாயாக எப்படி உயர்ந்தது எனத் தெரிய வில்லை. மேலும் 70 ஆண்டு பழமை வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தை அரசு புறக்கணித்து விட்டு 12 நாட்களே ஆன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்தது ஆச் சரியமளிக்கிறது.

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட் சியின் போது இந்த ஒப்பந்தம் செயல்பட முடியாமல் போயுள்ளது. இருப்பினும் அது தொடர்பான அனைத்து விஷயங்களும்  வெளிப்படையாக இருந்தது. அமைச் சரவையின் அங்கீகாரம் இருந்த போதிலும் மேம்பட்ட விமானத்தை வாங்குவதை ஏன் நிறுத்திவிட்டீர்கள்" என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சத்ருகன் திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளார்

நீதிமன்றம் செல்வோம்

"ரபேல் விமானம் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக கையெழுத்திடும் முன்பு வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங் களிடம் மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வில்லை" என்று கபில்சிபில் குற்றம் சாட்டினார். தொழில்நுட்பம் தொடர்பாக தாங்கள் எந்த கேள்வியையும் கேட்கவி ல்லை என்றும், எந்த அடிப்படையில் முன்பு செய்த ஒப்பந்தத்தைவிட மும் மடங்கு விலைக்கு வாங்க ஒப்புக்கொள்ளப் பட்டது ஏன் என்றும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் கேள்வி எழுப்பினார். 2012-ஆம் ஆண்டு அக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ரூ.560 கோடிக்கு ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்த மிட்டது. ஆனால் தற்போது ரூ.1600 கோடிக்கு இத்தொகை அதிகரித்துள்ள தாகவும் கபில் சிபில் தனது பேட்டியில் கூறினார்.

மேலும் இந்தப் பிரச்சினையில் வழக்கு தொடரப்படுமா என்ற செய்தியா ளர்களின் கேள்விக்கு, மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் ஆவணங்கள் கிடைக்கும் வரை நீதிமன்றத்துக்குச் செல்ல மாட்டோம் என்றும், ஆவணங்கள் முழுமையாக தங்கள் கைகளுக்கு வந்த பின்பே நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்றும் வழக்குரைஞரான கபில்சிபில் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner