எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, செப்.4 சிவசேனா கட்சி யின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் பணமதிப் பிழப்பு குறித்து தலையங்கத்தில் கட் டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "2016, நவம்பர் 8-ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரத மர் மோடி கொண்டு வந்தார். இந்த நடவடிக்கை யால் நாட்டில் கருப்புப் பணம், கள்ள நோட்டு, தீவிரவாதம், ஊழல் போன் றவை ஒழிக்கப்படும்" என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியதற்கு மாறாகவே அனைத் தும் நடந்துள்ளன.

மக்களுக்கு வெறுப்பையும், மோச மான அறிவுரைகளையும் செலுத்தி செயல்படுத்தப்பட்ட இந்த பணமதிப் பிழப்பு நடவடிக்கையைத் நாட்டுப் பற்றுடன் கொண்டுவரப்பட்டது என்று கூற முடியாது. நாட்டில் பொருளாதார சர்வாதிகாரத்தை இது ஏற்படுத்திவிட் டது. சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் பணமதிப் பிழப்பின் போது புழக்கத்தில் இருந்த செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.1.47 லட்சம் கோடியில், 99.30 சத வீதம் வங்கிக்குத் திரும்பி வந்துவிட்ட தாகக் கூறப்பட்டது. ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் கோடிகள் மட்டுமே வங்கிக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும், அந்த கட்டுரையில், "மலையைத் தோண்டிப் பார்த்தும், ஒரு சுண்டெலிகூட வெளியேவரவில்லை என்பது தான் தெளிவாகிறது. இந்தக் குறைவான தொகையை, கண்டுபிடிப்ப தற்காகத்தான் மத்திய அரசு பொரு ளாதாரத்தையே சிதைத்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் விளை வால், நாடு பொருளாதார குழப்பத்தைச் சந்தித்தது. சிறு, குறு தொழில்கள் அழிந்து போயின. சேவைத்துறை மிகப் பெரிய சிக்கலில் சென்றது. கட்டுமானத் துறை ஆட்டம் கண்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். ஏராளமான மக்கள் வங்கியின் வாசலிலும், ஏ.டி.எம் வரிசையிலும் நின்று மடிந்தனர். நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியின் வேகம் திடீரென சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. பண மதிப்பிழப்புக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியும், அதை நாடு முழுவதும் பகிர்ந்து அளிக்க ரூ.2 ஆயிரம் கோடியும், ஏ.டி.எம்.,மை மேம்படுத்த ரூ.700 கோடியும் செலவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும், நாடு மிகப்பெரிய பொரு ளாதார பாதிப்பை, இழப்பைச் சந்தித்த போதிலும், மோடி அரசு தொடர்ந்து பெருமை பேசி வருகிறது. ரோம்நகரம் தீபற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்தது நினைவுக்கு வருகிறது. பணமதிப்பிழப்பு கொடுமையான நட வடிக்கையாகும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது புரட்சிகரமான நடவடிக்கை. அதனால் கருப்புப்பணம் ஒழிந்துவிடும் என்று நம்மிடம் காட்சிப்படுத்தப்பட் டது. ஆனால், நூற்றுக்கணக்கான கோடி கறுப்புப்பணம் அரசியல்வாதிகளால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. குஜராத்தில் உள்ள 2 கூட்டுறவு வங்கி களில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டன.

பணமதிப்பிழப்பு குறித்து சில மாதங்களுக்கு முன்பே சில நாளேடு களில் இது குறித்து செய்தி வெளியானது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முட்டாள் என்று பட்டம் சூட்டியவர் களின் செயலின் உண்மை வெளிவந்து விட்டது. பணமதிப்பிழப்பு தோல்வி அடைந்த ஒன்று என்று ரிசர்வ் வங்கி கூறிவிட்டது" என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா தலைவராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் தான் நாட்டிலேயே மிகவும் விரைவாக சுமார் 800 கோடிகள் புதிய நோட்டுக்களாக மாற்றபப்ட்டன. இது தொடர்பாக அமித்ஷாமீது ஏற்கெனவே குற்றச்சாட் டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுவரை இந்த குற்றச்சாட்டு குறித்து பாஜகவின் கூட்டணிக்கட்சிகள் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் முதல்முதலாக சிவ சேனா மறைமுகமாக அமித்ஷாவை ஊழல்வாதி என்று குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ நாளேடான "சாம்னா" வில் தலையங்கம் எழுதியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner