எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெமிலி, செப். 4- தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டில் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்ப டுத்தி, 9 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன் திருத்த ணியில் நடைபெற்ற விழாவில் தெரிவித்தார்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் பேசியது:  நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் சீருடை மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பு முதல் எட் டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வண் ணச் சீருடை மாற்றம் செய்யப் படவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரசு சார்பில் வண்ணச் சீருடைகள் வழங்கப்படும்.

கடந்த 2017 -ஆம் ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி கள், மிதிவண்டிகள் வழங்கப் படவில்லை. இதற்குக் கார ணம் நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் காலதாமதம் ஆனது. தற்போது, வழக்கு முடிந்துவிட்டதால், மிதிவண் டிகள் அடுத்த மாதமும், மடிக் கணினிகள் வரும் டிசம்பர் மாத இறுதியிலும் வழங்கப் படும்.

புதிய பாடத்திட்டம் 1500 ஆசிரியர்கள், 72 உதவியாளர் கள், 7 இசை ஆசிரியர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள் ளது. நீட் தேர்வுக்காக, மொத் தம் 432 மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு கள் ஏற்படுத்தி, 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி அளிக்கப் படும். இனிவரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், மாதம் ரூ.7,500 சம்பளத்தில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner