எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமேசுவரம், செப். 4- இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம், புதுக் கோட்டை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதியிலிருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை சிறை பிடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இலங்கை கடற் படையால் 192 படகுகள் பறி முதல் செய்யப்பட்டு உள்ளன.  இந்த படகுகள் அனைத்தையும் விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்தபோதும், விடு விக்கப்படாமல் உள்ளன. இவை ஒன்றோடொன்று மோதி சேதமடைந்து கடலில் மூழ்கி வருகின்றன. இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம், புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரையும் விடுவிக்கவில்லை. இலங்கை கடற்படையின் நட வடிக்கையால் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்வது குறைந்து வருகிறது.

ராமேசுவரம் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம், சங்க தலைவர் என்.ஜெ.போஸ் தலைமையில் நேற்று காலை நடந்தது. இதில் இலங்கை அரசால், அரசுடமையாக்கப் பட்ட தமிழக மீனவர்கள் 3 பேரின் படகுகளை விடுவிக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட அனைத்து படகுகளையும் தமி ழகம் கொண்டு வர வேண்டும். சேதமடைந்து கடலில் மூழ்கிய படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இலங்கை யில் அமல்படுத்தப்பட்ட புதிய மீன்பிடி சட்டத்தை ரத்து செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படும் டீசலை உற் பத்தி விலைக்கே வழங்க வேண் டும் என வலியுறுத்தி கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய் யப்பட்டது. மேலும், வரும் 7ஆம் தேதி ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வும், தலைநகர் டெல்லியில் பேரணி நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் படி, ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத் தைத் துவக்கினர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் கடலுக்கு செல்லாமல் ராமேசுவரத்தில் கரை நிறுத்தப் பட்டுள்ளன.

சமீபத்தில் கைப்பற்றப் பட்ட தமிழக மீனவர்களின் 3 படகுகளை அரசுடமையாக் கவும், இலங்கை மீனவர்களின் நலன் கருதி இந்த படகுகள், மீன்பிடி உபகரணங்களை அழிக்கவும் இலங்கை ஊர்க் காவல் துறை நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறை யீடு செய்ய ராமேசுவரம், மண் டபத்தை சேர்ந்த படகு உரிமை யாளர்கள் தேவதாஸ், பிரான் சிஸ், சதீஷ் ஆகியோர் நேற்று இலங்கை புறப்பட்டு சென்ற னர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner