எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கெய்ரோ, செப். 4- எகிப்தில் சமூக வலை தளங்களுக்கு கட்டுப் பாடு விதிக்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு அதிபர் அப் தெல் ஃபட்டா அல்-சிசி ஒப்பு தல் அளித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ மாக வெளியிடப்பட்ட அரசித ழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சமூக வலை தளங்கள் மற் றும் சமூக ஊடக பயனாளர்க ளுக்கு கட்டுப்பாடுகளை விதிக் கும் வகையிலான புதிய சட் டம் கடந்த ஜூலையில் நாடா ளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. தற்போது அந்த சட் டத்துக்கு அதிபர் அல்சிசி முறைப்படி தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.

இப்புதிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஊடக ஒழுங்குமுறைக்கான கவுன் சில், 5,000-க்கும் மேற்பட்ட பின்தொடருபவர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் அல்லது தனியார் பக்ககங்கள் அல்லது வலைதளங்களை கண் காணிக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

மேலும், சட்டத்தை மீறி வன்முறை அல்லது வெறுப் புணர்வை தூண்டும் வகையில் பொய்யான செய்திகள் மற்றும் தகவல்களை வெளியிடும் அனைத்துவிதமான வலைதளம் அல்லது தனி நபர் கணக்குகளை முடக்கும் அதிகாரம் அந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள் ளது என்று அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner