எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாய், செப். 4- அய்க்கிய அரபு அமீரக நாட்டில் இறந்த இந்தி யரின் முகவரி கண்டறியப்பட் டதை அடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் இந்தியா வுக்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக கலீஜ் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான செய்தி வருமாறு:

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த யூசஃப் கான் ரஷித் கான் (50) கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி அஜ்மனின் அல் ரஷிதியா பகுதியில் இறந்து கிடந்தார். உடல் பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரது உடை மைகளை சோதனை செய்ததில் நுழைவு இசைவு (விசா) ஆவ ணம் மட்டும் அவரிடம் இருந் தது. கடவுச்சீட்டு இல்லை. இதையடுத்து, துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது நுழைவு இசைவு ஆவணத்தை வைத்து சோதனை செய்ததில் மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனைச் சேர்ந்தவர் என் பது தெரியவந்தது. எனினும், அந்த முகவரியில் அவரது குடும் பத்தினர் வசிக்கவில்லை. இதை யடுத்து, உஜ்ஜைனில் உள்ள மசூதியிலும் யூசஃப் கானின் இறப்பு குறித்து அறிவிக்கப்பட் டது.

அப்போதும் அவரது குடும் பத்தினர் யாரும் அதிகாரிகளை தொடர்புகொள்ளவில்லை. இதையடுத்து, இந்தியத் தூதரக அதிகாரிகள் கடவுச்சீட்டு விண் ணப்பத்தை ஆய்வு செய்தனர். அதில் வேறொரு முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த முகவரியில் குடும்பத்தினர் இருந்தனர். எனினும், தங்க ளுக்கு போதிய வசதி இல்லை எனவும், தங்களால் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் செலவை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துவிட்டனர். இருப்பினும், இந்தியத் தூதர கம் அதற்குரிய செலவை ஏற் றுக்கொண்டு, உடலை குடும் பத்தினரிடம் ஒப்படைத்தது என்று இந்தியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரூப் சித்து தெரிவித்தார் என அந்தச் செய் தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner