எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 4- அமெரிக்கா வின் முதுபெரும் அரசியல்வாதி யும், ராணுவ அதிகாரியுமான ஜான் மெக்கெய்ன் (81) உடல் மேரிலேண்ட் மாகாணத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அரிஸோனா மாகாண எம். பி.யான ஜான் மெக்கெய்ன், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 6 முறை அந்த மாகாணத்திலிருந்து நாடாளு மன்றத்துக்கு தேர்வு செய்யப் பட்டவர். 2008-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஒபாமாவை எதிர்த்து குடியரசுக் கட்சி சார் பில் வேட்பாளராக களமிறங்கி யவர். நாடாளுமன்ற உறுப்பின ராகப் பணியாற்றியபோது, பல் வேறு விவகாரங்களில் ஜான் மெக்கெய்ன் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்.

இவர்,கடுமையான மூளைப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலை யில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். அவரது உடல் கடந்த வாரம் முழுவதும் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டி ருந்தது. வாசிங்டனில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் வைக் கப்பட்டிருந்த அவரது உட லுக்கு முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் உள்ளிட்டோர் இறுதி மரி யாதை செலுத்தினர்.

பின்னர் மெக்கெய்ன் உடல் மேரிலேண்ட் மாகாணத்துக்கு கொண்டு வரப்பட்டு அன்ன போலீஸில் உள்ள அமெரிக்க கடற்படை அகாதெமியில்  அடக்கம் செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner