எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 4- மின்னணு சாதனங்களுக்கு தேவையான செமிகண்டக்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சிஃபைவ் (SiFive) மற்றும் ஓபன் சிலிகான் (Open-Silicon) நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதன் முதலாக வடிவமைப்பு போட்டிக் கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்த போட்டியில் மாண வர்கள், பொறியாளர்கள், ஸ்டார்ட் அப் (Start ups) நிறுவனர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது விருப்பத் தேர்வாக அமைந்துள்ள சி.பி.யு அய்.பி (CPU IP) உள்ளிட்ட சிப் வடி வமைப்புகளை நிறுவனத்தின் மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக் கலாம். இதில் வெற்றி பெறுபவர் களுக்கு சிஃபைவ் நிறுவனத்துடன் இணைந்து சி.பி.யு., அய்.பி. டிசைன் சப்போர்ட், சிப் சாம்பிள் உருவாக்கலில் இணைந்து பணி யாற்ற அனுபவம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என சிஃ பெவ் நிறுவன துணைத் தலைவர் சுனில் செனாய் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு www.five.com என்ற இணைய தளத்தை அணுகலாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner