எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோயம்புத்தூர், செப். 4- வன விலங்குகள் மற்றும் வாழிடங்கள் பாதுகாப்பிற்கான ஆக்கபூர்வ வேலைகளில் ஈடுபடுகின்ற தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிப்பதற்கும், ஆதரவளிப் பதற்குமான தன் வருடாந்திர நன்கொடைகள் மானிய திட்டத் தின் தொடக்கத்தை தி ஹேபி டேட்ஸ் டிரஸ்ட் (The Habitats Trust) அறிவித்துள்ளது. ஒட்டு மொத்த அழிவு மற்றும் சட்ட விரோதமான வனவிலங்கு வர்த்த கம் ஆகியவற்றின் அச்சுறுத்த லுக்கு எதிராக வாழிடங்களில் போராட்டத்திற்கு உதவுவதற்காக பல அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் தைரியமான முன்னெடுப் புகளை மேற்கொண்டுள்ளனர். அந்நிறுவனங்களுக்கு திறன் உருவாக்கத்தில் ஹேபிடேட்ஸ் டிரஸ்ட் உதவவும் செய்கிறது என இதன் அறங்காவலர் ரோசினி நாடார் மல்ஹோத்ரா தெரிவித் துள்ளார்.

8 டன் தங்கத்தை வாங்கியது ரிசர்வ் வங்கி

புதுடில்லி, செப். 4- ரிசர்வ் வங்கி கடந்த நிதியாண்டில் 8.46 டன் தங் கத்தை வாங்கியுள்ளது. கடந்த ஒன் பது ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை. இதுகுறித்து அவ்வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: கடந்த நிதி யாண் டில் ரிசர்வ் வங்கி 8.46 டன் தங் கத்தை கொள்முதல் செய்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பரில் தான் ரிசர்வ் வங்கி தங்கத்தை கொள் முதல் செய்திருந்தது. அப்போது, சர்வதேச நிதியத்தி டமிருந்து 200 டன் தங்கம் வாங்கப்பட்டது.

கடந்த 2017 ஜூன் நிலவரப் படி ரிசர்வ் வங்கியின் வசம் தங்கத்தின் கையிருப்பு 557.77 டன்னாக இருந் தது. தற்போது, 8.46 டன் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டதை யடுத்து, நடப்பாண்டு ஜூன் நில வரப் படி தங்கத்தின் கையிருப்பு 566.23 டன்னாக உயர்ந்துள்ளது. மொத்த தங்க கையிருப்பில், 292.30 டன் நோட்டுகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 273.93 டன் தங்கம் ரிசர்வ் வங்கியின் சொத்தாக கருதப்படுகிறது.

கடந்தாண்டு ஜூன் 30 நில வரப்படி ரூ.62,702 கோடியாக இருந்த தங்கத்தின் மதிப்பு நடப் பாண்டு இதே கால அளவில் 11.12 சதவீதம் அதிகரித்து ரூ.69,674 கோடியை எட்டியுள் ளது என ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner