எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தென்கொரியா, செப். 4- தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக வாகையர் பட்டப் போட்டியின் மூலமாக, இந்திய வீராங்கனை கள் அஞ்சும் முட்கில், அபூர்வி சந்தேலா ஆகியோர் டோக் கியோ 2020 ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்தனர்.

அவர்கள் இருவருமே மக ளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் போட்டியிட்டனர். அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில் அஞ்சும், அபூர்வி ஆகிய இருவரும் முறையே 4 மற்றும் 6-ஆவது இடங்களைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

அதில் அஞ்சும் முட்கில் 248.4 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியைக் கைப்பற்ற, அபூர்வி சந்தேலா 207 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தார்.

இதன் மூலமாக இருவருக் கும் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதியானது.

எனினும், சர்வதேச போட் டிகள் மற்றும் ஒலிம்பிக்கிற்கான தேர்வுப் போட்டிகளில் இரு வரும் பெற்ற புள்ளிகள் அடிப் படையில் அவர்களுக்கான இறுதி வாய்ப்பை இந்திய தேசிய ரைஃபிள் சங்கம் முடிவு செய்யும்.

இதனிடையே, திங்கள் கிழமை நடைபெற்ற ஆடவருக் கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரி வில் இறுதிச்சுற்றுக்கு முன் னேறிய இந்திய வீரரான தீபக் குமார், அதில் 6-ஆம் இடம் பிடித்தார்.

இந்த உலக வாகையர் பட்ட முதியோர் சீனியர் பிரி வில் இந்தியாவுக்கு கிடைத் துள்ள முதல் பதக்கம் இதுவா கும். முன்னதாக, இளையோர் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங் கங்கள் கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner