எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜகார்த்தா, செப். 4- இந்தோனே சியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறை வடைந்தன. இதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில் போட் டிகள் நடைபெற்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆசியப் போட்டியில் கலந்துகொண்ட நாடுகளில், 9 நாடுகள் ஒரு பதக்கமும் பெறா மல் வெறுங்கையுடன் திரும்பி யுள்ளன. வங்கதேசம், பூடான், புரு னேய் தருசலம், மாலத்தீவு, ஓமன், பாலஸ்தீனம், இலங்கை, திமோர் லெஸ்தி, யேமன். வங்கதேச அணி 117 வீரர் களை இந்த ஆசியப் போட் டிக்கு அனுப்பியது. தடகளம், பளு தூக்குதல், கூடைப்பந்து, பீச் கைப்பந்து, பிரிட்ஜ், பட குப்போட்டி, கோல்ப், மல் யுத்தம், ஆக்கி, கபடி, துப் பாக்கிச் சுடுதல், வில்வித்தை, நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வங்கதேச வீரர்கள் ஈடுபட்டாலும் அவர் களால் ஒரு பதக்கத்தையும் பெறமுடியவில்லை. இதே போல இலங்கையும் 172 வீரர் களை அனுப்பியும் ஒரு பல னும் இல்லாமல் போனது.

ஒரு பதக்கமும் பெறாத நாடுகள்-  வீரர்களின் எண்ணிக்கை

இலங்கை - 172 வீரர்கள்

வங்கதேசம் - 117 வீரர்கள்

மாலத்தீவு - 116 வீரர்கள்

திமோர் லெஸ்தி - 67 வீரர்கள்

ஓமன் - 46 வீரர்கள்

பாலஸ்தீனம் - 46 வீரர்கள்

யேமன் - 37 வீரர்கள்

பூடான் - 24 வீரர்கள்

புருனேய் தருசலம் - 15 வீரர்கள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner