எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 4- 72-வது மாநில சீனியர் நீச்சல் வாகையர் பட் டப் போட்டி சென்னை வேளச் சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் மூன்று நாட்கள் நடந்தது.

கடைசி நாளில் நடந்த 400 மீட்டர் பிரிஸ்டைல் பிரிவில் நெல்லை வீரர் எமில் ராபின் சிங்கும், 200 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் நெல்லை வீரர் சேது மாணிக்கவேலும், பெண்களுக்கான 100 மீட்டர் பிரிஸ்டைல், 50 மீட்டர் பட்டர் பிளை பிரிவுகளில் சென்னை டர்டில்ஸ் கிளப்பை சேர்ந்த ஜெயவீனாவும், 400 மீட்டர் பிரிஸ்டைல் பந்தயத்தில் கோவை வீராங்கனை பாவிகா துகாரும் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

போட்டிகளின் முடிவில் தனிநபர் வாகையர் பட்டத்தை ஆண்கள் பிரிவில் நெல்லை வீரர் எமில் ராபின் சிங்கும், பெண்கள் பிரிவில் ஜெயவீனா வும் பெற்றனர். ஒட்டுமொத்த வாகையர் பட்டத்தை 283 புள் ளிகளுடன் சென்னை டர்டில்ஸ் கிளப் கைப்பற்றியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner