எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.5 பெருந்தமனி சிதைவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரிய அறுவை சிகிச்சை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழி லாளி ஜெயராமையா(50). இவ ருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் கடும் வயிற்று வலி, ரத்த வாந்தி உள்ளிட்ட பிரச்சினை களால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார்.

ரத்த நாள அறுவை சிகிச் சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு, பரிசோதனை யில் இதயத்திலிருந்து வயிற் றுக்கு செல்லும் பெருந்தமனி வீங்கி வெடித்ததில், அருகில் உள்ள சிறுகுடலை அரித்து ரத் தக்கசிவை ஏற்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம் பல நமச்சிவாயம் செய்தியாளர் களிடம் கூறியது:

நோயாளிக்கு மேற்கொள் ளப்பட்ட அறுவை சிகிச்சை யின்போது, வெடித்து சிறுகுட லில் ஒட்டியிருந்த பெருந்தமனி பிரித்து எடுக்கப்பட்டது. சிறு குடலில் ஏற்பட்டிருந்த துளை பெருந்தமனியின் ஒரு பகுதி யையே வைத்து அடைக்கப்பட் டது.

பெருந்தமனிக்குள் இருந்த ரத்த உறைவுகளும் அகற்றப்பட் டன. அதன் பிறகு பெருந்தமனி யில் இருந்து கால்களுக்கு செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட் டது. இதனால் நோயாளியின் உயிரும், கால்களும் காப்பாற் றப்பட்டன.

கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறையில் இதுவரை 77 பெருந்தமனி அறுவை சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதே சிகிச்சையை தனியார் மருத்து வமனையில் மேற்கொண்டால் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner