எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெருசலேம், செப். 5- சிரியா விவ காரத்தில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவான  நிலைப்பாட்டை ஈரான் அரசு கடைப்பிடித்து வருகிறது. சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு இடையிலான  எல்லைப்பகுதியில் ஈரானின் ஆதிக்கம் அண்டை நாடான இஸ்ரேலுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் ஈராக்கின் பரம எதிரியாக இருந்த ஈரான் வளை குடா பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநிறுத் தும் வகையில் தற்போது ஈராக் குடன் நட்பு பாராட்டுவதை இஸ்ரேலும் அதன் நட்புநாடான அமெரிக்காவும் விரும்பவில்லை.

இந்நிலையில், ஈராக் நாட் டுக்கு சமீபத்தில் ஈரான் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை அனுப்பி வைத்ததாக பிரபல செய்தி நிறு வனம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை இருநாடுகளுமே மறுத்தன. இதுதொடர்பான செய்தி வெளியானபோது அமெரிக்க ராணுவ அமைச்சர் மைக் பாம்ப்பியோ கடந்த சனிக்கிழமை இதற்கு கண்ட னம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டிய ளித்த அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவிக்டார் லைபெர் மேன், ‘சிரியாவில் நடைபெற் றுவரும் சம்பவங்களையும், ஈரானின் அச்சுறுத்தல்களையும் நாங்கள் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். சிரியா எல்லையுடன் எங்களை நாங் கள் சுருக்கிக்கொள்ள மாட்டோம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்’ என குறிப்பிட் டார்.

ஈராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர் களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஈரானின் அச் சுறுத்தல்களை எல்லா நிலைக ளிலும் நாங்கள் எதிர்த்து சமா ளிப்போம். அச்சுறுத்தல் எங்கி ருந்து வந்தாலும் கவலை இல்லை. இஸ்ரேலின் சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் நட வடிக்கை எடுக்கப்படும் என வும் அவர் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner