எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அருமைத் தோழர்களே!

இவ்வாண்டு  தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் திராவிட முதியோர் கலந்துரையாடலும் - விருந்தோம்பல் பாராட்டும் நடைபெறவிருக்கிறது.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்; இடதுசாரியினர், தமிழன்பர்களுக்கும் இந்தப் பாராட்டுப் பொருந்தும். 90 வயது கடந்த இந்த ஆலமரங்களுக்குப்'' பாராட்டும், நன்றியும் தெரிவிக்க வேண்டியது வேர்களின் கடமையல்லவா!

90 வயதைக் கடந்த முதுபெரும் பெருமக்கள் குறித்து மேலும் காலதாமதம் செய்யாமல் கண்டறிந்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வரவும்,  திருப்பி அனுப்பி வைக்கவும், உதவியாகவும், அனுசரணையாகவும் இருக்குமாறு கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

5.9.2018