எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், செப் 5 மத்தியப் பிரதேசம் மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் ஜனசம்பர்க யாத்திரா' என்ற என்ற பெயரில் பிரச்சாரப் பயணம் செய்தார். போபாலுக்கு அருகில் உள்ள சிடி மாவட்டத் தில்பொதுக்கூட்டம்ஒன்றில் பேசும் போது சிலர் கேள்வி களைக்கேட்டுள்ளனர்.அவர்களின்கேள்விக்குபதில ளிக்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். இதனை அடுத்து அவர்களில் ஒரு பெண் தன்னுடைய கருப்பு துப்பட்டாவை எடுத்து காண்பித்தார். அங்கு இருந்த சிலரும் கருப்புக் கொடியை காட்டினார்கள். உடனே அவர் களை காவல்துறையினர் கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர்.

இந்த ரகளைகள் நடைபெற் றுக் கொண்டிருந்தபொழுதே தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் மீது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தன்னுடைய செருப்பை கழற்றி வீசினார். இதனை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.  இந்தநிகழ்ச்சிக்கு முன்பு சாலையில்முதல்வர்வாகனம் செல்லும்போது வணிகர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டினர். அவர்களில் 7 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். இது குறித்து பேசிய சிவ்ராஜ்சிங் சவுகான் காங்கிரசுகாரர்கள் எனது உயிருக்கு குறிவைத்துள்ளனர். கருப்புக்கொடி காட்டுகிறோம்  என்ற பெயரில் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறினார்.