எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குளத்தூர், செப். 5- காற்றின் வேகம் குறைந்ததால் குளத்தூர் பகுதி உப்பளங்களில் உப்பு விளைச்சல் குறைந்தது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர், வேப்பலோடை, தருவைகுளம், வைப்பார், கல் லூரணி, சூரங்குடி, பச்சையா புரம், வேம்பார், கல்மேடு பகு தியில் அதிக அளவில் உப்ப ளங்கள் உள்ளன.

கடந்த மூன்று மாதங்களாக காற்றின் வேகம் அதிகரித்ததால் இங்குள்ள உப்பளங்களில் உப்பு விளைச்சல் நன்றாக இருந்தது.

கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் குறைந்து உள் ளதால் உப்பு விளைச்சல் வெகு வாக குறைந்து காணப்படுகிறது.

அடுத்த மாதம் பருவமழை துவங்க உள்ள நிலையில் உப் பள பாத்திகளில் வாரப்பட்ட உப்புகளை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பருவமழை இரண்டு மாதம் பெய்யும் என்பதால் அதற்கு முன்பே முடிந்தளவு உப்பு விளைவித்து அம்பாரமாக்கி அதனை ஓலை மற்றும் தார்ப் பாய்கள் கொண்டு மூடி வரு கின்றனர்.

இதுகுறித்து உப்பளத்தொழி லாளர்கள் கூறுகையில், ‘கடந்த வருடத்தை விட இந்த வருடம் காற்றின்வேகம் அதிகரித்ததால் இப்பகுதியில் உப்பு விளைச் சல் நன்றாக இருந்தது. இத னால் அனைத்து தொழிலாளர் களுக்கும் தினமும் வேலை கிடைத்தது. கடந்த சில தினங் களாக காற்றின் வேகம் குறைந் ததால் உப்பு விளைச்சல் வெகு வாக குறைந்துள்ளது.

இருப்பினும் வெயிலை பயன்படுத்தி முடிந்தளவு உப்பு விளைச்சலை அதிகப் படுத்தி சேமிக்கும் பணியில் ஈடு பட்டு வருகிறோம்’ என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner