எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சங்வோன், செப். 5- அய்எஸ்எஸ்எஃப் உல கக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி யில் 50 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் தங்கப் பதக்கம் வென்றார்.

10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சவுரவ் சவுத்ரி--அபிநயா பாட்டீல் இணை வெண்கலம் கைப்பற்றியது.

இந்த இரு பதக்கங்களின் மூலமாக, நடப்பு உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7-ஆகியுள்ளது. அய்எஸ் எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா 7 பதக்கங்கள் வெல்வது இது முதல் முறையாகும். முன்னதாக, 12 ஆண் டுகளுக்கு முன்பு குரோசியாவின் சாக்ரேப் நகரில் நடைபெற்ற போட்டியில் 6 பதக்கங் கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

தென் கொரியாவின் சங்வோன் நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவருக் கான 50 மீ பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற ஓம்பிரகாஷ் மிதர்வால், இறுதிச்சுற்றில் 564 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். செர்பியாவின் டாமிர் மிகெச் (562) வெள்ளியும், தென் கொரியாவின் டேம்யுங் லீ (560) வெண்கலமும் வென்றனர்.

இப்பிரிவில் போட்டியிட்ட மற்ற இரு இந்தியர்களில் ஜிது ராய் (552) 17-ஆவது இடமும், மன்ஜித் (532) 56-ஆவது இடமும் பிடித்தனர். இதனிடையே, 50 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் ஓம்பிரகாஷ், ஜிது ராய், மன்ஜித் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,648 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தது.

மானு, ஹீனா ஏமாற்றம்: மூத்த மகளி ருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் பெரி தும் எதிர்பார்க்கப்பட்ட மானு பேக்கர், ஹீனா சித்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினர்.

தகுதிச்சுற்றில் மானு (574) 13-ஆவது இடத்தையும், ஹீனா (571) 29-ஆவது இடத் தையும் பிடித்தனர். 10 மீ ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் மானு, ஹீனா, ஷ்வேதா சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,713 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தது.

வெண்கலம்: இளையோர்களுக்கான போட்டியில், 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி-அபினயா பாட்டீல் இணை வெண் கலப் பதக்கம் வென்றது.

இறுதிச்சுற்றில் இந்த இருவர் கூட்டணி 329.6 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது. முதல் இரு பதக்கங்களை தென் கொரியா தட்டிச் சென்றது.

இப்போட்டியில் முன்னதாக மூத்த மக ளிர் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் அஞ்சும் முட்கில் வெள்ளி வென்றும், அபூர்வி சந் தேலா 4-ஆம் இடம் பிடித்தும் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner