எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.5 பணமதிப்பிழப்பு நடவடிக்கை,இந்தியாவில்படு மோசமானவிளைவுகளைஏற் படுத்தி இருப்பதாகவும், இத னால்பிரதமர் மோடிக்குதேர் தலில் தக்க பதிலடி கிடைக்கப் போவதாகவும் தி கார்டியன் பத்திரிகை கட்டுரை வெளியிட் டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லண் டனை தலைமையிடமாகக் கொண்டுவெளியாகும் தி கார்டி யன் பத்திரிகையின் இந்த கணிப்பு பாஜகவினரை கலக்கம் அடைய வைத்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்100--க்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர்; 15 லட்சம் பேர் வேலையிழந் தனர்; 15 கோடி பேர் பலவாரங் கள் தினக்கூலி கிடைக் காமல் அவதிப்பட்டனர் என்று கட்டு ரையில் குறிப்பிட்டுள்ள தி கார்டியன், 2016 நவம்பரில் 500மற்றும்1000ரூபாய்நோட் டுகள் செல்லாது என அறி வித்தது,கருப்புப்பண பேர்வழி களை களையெடுக்கும் நடவடிக் கையே! என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்; ஆனால், இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால்,உலகின்மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தி யாவின் பொருளாதாரம் கையை விட்டு நழுவிய பலூன் போன்று சுருங்கி விட்டது என்றும் தெரி வித்துள்ளது.

மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவிகிதம் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியதையும், பணமதிப்பு நீக்கம் தவறுஎன்றால் தண்டனை கொடுங்கள் எனப் பிரதமர் மோடி அறைகூவல் விடுத்ததையும் நினைவுபடுத்தியுள்ளதிகார்டி யன்பணமதிப்புநீக்கநட வடிக்கை மோசமான விளைவு களை ஏற்படுத்தி இருப்பதால் பிரதமர் மோடிக்கு தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. இதனாலேயே, பாஜக ஆளும் 3 மாநிலங்களுக்கு விரைவில் வரவுள்ள தேர்தலில் வெற்றி உறுதி என காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளதாகவும் கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner