எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், செப். 5- அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் காலி றுதி சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து 9- ஆவது முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் மகளிர் காலிறுதி சுற்று காலிறுதி சுற்று இன்று (புதன்கிழமை) நடை பெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லி யம்ஸ் செக் குடியரசின் கரோ லினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.

முதல் செட்டின் தொடக்கத் தில் செரீனா வில்லியம்ஸ் முத லில் சற்று தடுமாற்றம் கண் டார். அதன்மூலம், முதல் செட்டில் பிளிஸ்கோவா 4--2 என முன் னிலை வகித்தார். ஆனால், அதன்பிறகு எழுச்சி கண்ட செரீனா தொடர்ச்சியாக 4 ஆட் டங்களை வென்று முதல் செட்டை 6--4 என கைப்பற்றினார்.

அதன்பிறகும், தனது ஆதிக் கத்தைத் தொடர்ந்த செரீனா வில்லியம்ஸ் 2-ஆவது செட்டை யும் 6--3 என கைப்பற்றினார். இதன்மூலம், 6--4, 6--3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து 9-ஆவது முறையாக அமெரிக்க ஓபன் அரையிறு திக்கு முன்னேறினார்.

செரீனா வில்லியம்ஸ் தனது அரையிறுதி சுற்றில் லாத்வியா நாட்டு வீராங்கனை அனாஸ் தாஸ்திஜா செவாஸ்தோவாவை எதிர்கொள்கிறார்.


சென்னை தடகளம் பிரான்சிஸ் சேவியர் வாகை சூடியது

சென்னை, செப். 5- பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், கிழக்கு சென்னை கல்வி மாவட்ட தடகளப் போட்டி, சர்.தியாக ராயா கல்லூரி மேல்நிலைப் பள்ளி சார்பில், நேற்று முன்தி னம் நடந்தது. 90 பள்ளிகளைச் சேர்ந்த, 250 மாணவ - மாண வியர் பங்கேற்றனர்.இதில், 14, 17, மற்றும் 19 வயதிற்கு

உட்பட்டோர் பிரிவுகளில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண் டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந் தன. மாணவர் பிரிவில், ஒட்டு மொத்த வாகையர் பட்டத்தை, முத்தையால்பேட்டை மேல் நிலைப் பள்ளியும், மாணவிய ரில், புனித பிரான்சிஸ் சேவியர் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப் பள்ளியும் கைப்பற்றின.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner