எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"சர்தார் வல்லபாய் படேல், பிரதமராகவில்லையே என ஒவ்வொரு இந்தியனும், வருந்துகிறான்" என மோடி கூறியிருக்கிறார். குஜராத்தில்,  சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர சிலை ஒன்று மிக வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. 2,500 தொழிலாளர்கள், 5000 செப்புத் தகடுகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அகமதாபாத்தில் இருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த சிலையை 153ஆவது அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சிலையை உருவாக்க ஆகும் செலவு மட்டும் 2,990 கோடி ரூபாய். அக்டோபர் 31ஆம் தேதி இந்த சிலை  மோடியால் திறக்கப்பட உள்ளது.

தனது பிரச்சாரங்களில் பல முறை சர்தார் வல்லபாய் படேலை உயர்த்திப் பேசிய மோடி, வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மக்களை கவர இந்த சிலையை உருவாக்கி வருவதாகக் கருதப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் ஆவார். நேருவின் அரசாங்கம் படேலின் புகழை திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. படேலின் சிலையை மிஞ்சுகிறது, மகாராட்டிராவில் அமைய உள்ள  சத்திரபதி சிவாஜி சிலை. 212 மீட்டரில் அமைய உள்ள சிலைக்கு, ஆகப்போகும் செலவு 3,600 கோடி ரூபாய். மகாராட்டிரா மக்களின் வாக்குகளைப் பெறவே இந்த சிலையை அமைக்க இருப்பதாக, எதிர்ப்பாளர்கள் விமர்சித்தனர்.

இந்த இரண்டு சிலைகளுக்கும் ஆகும் செலவு 6,590 கோடி ரூபாய். காலதாமதத்தால் மேலும் செலவு அதிகரிக்கும் எனவும் கருதப்படுகிறது. இவர்களின் சிலை அரசியலுக்கு, இந்திய மக்களின் பொருளாதாரத்துடன் விளையாடு கின்றனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தமிழ்நாட்டில் தலைவர்களுக்குச் சிலை எழுப்பினால் ஏகடியம் பேசிட ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும். சென்னையில் அண்ணாவுக்கு உருவச் சிலை திறக்கப்பட்ட போது பார்ப்பன ஏடுகள் எழுதியது கொஞ்சநஞ்சமல்ல.

அந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் மறவன் மடலில் (4.10.1970) "பெரியாரைக் கேளுங்கள்" என்ற தலைப்பிட்டு எழுதிய எழுச்சி ஓவியம் இதோ:

அண்ணனே!

அழியாப்புகழ் மன்னனே! உயர்நீதி மன்றத்தின் உள்ளே முத்துசாமி அய்யர் சிலை வைத்த போது ஆனந்தப் பண்பாடியவர்கள்; சென்னை மாநிலக் கல்லூரி வாசலிலே உ.வே.சாமிநாதய்யர் சிலை வைத்தபோது மகிழ்ந்து கூத்தாடியவர்கள்; சென்னை மத்திய மருத்துவமனையில் டாக்டர் ரங்காச்சாரியின் சிலை வைத்தபோது வாழ்த்தி மகிழ்ந்தவர்கள்; சென்னை அய்ஸ்அவுசில் விவேகானந்தர் சிலை வைத்தபோது விளக்கம் எழுதிப் பூரித்துப் போனவர்கள்; உனக்கு சிலை வைக்கும்போது மட்டும் ஏனண்ணா பொருமிச் சாகிறார்கள்? கேலி பேசி தங்களது மாச்சரியங்களை ஏனண்ணா கொட்டித் தீர்க்கிறார்கள்?

சென்னையிலே சி.பி.ராமசாமி அய்யர் ரோடுகளும், சி.வி. இராமன் ரோடுகளும், விஜயராகவாச்சாரி ரோடுகளும் மலிந்து கிடக்கும்போது அதற்கு எதிர்ப்பு முழங்காத ஏடுகள், உன் பெயரிலே ஒருசாலைக்குப் பெயர்மாற்றும்போது மட்டும் எதிர்ப்புக்குரல் - எக்காளப் பேச்சு - ஏளன வார்த்தைகள் - எட்டுக் காலத்தில் ஆறு காலம் கண்டனக் கடிதங்கள் - இப்படி எரிச்சலாய்த் தாக்குவது ஏனண்ணா? என்னண்ணா சிரிக்கிறாய்? ஏனண்ணா இந்தப் புன்முறுவல்? எதற்காக அண்ணா இப்படி கண்ணைச் சிமிட்டுகிறாய்? ஏனண்ணா கன்னத்தைத் தடவி விட்டுக்கொள்கிறாய்? ஓகோ... இப்போது புரிந்துகொண்டேன் அண்ணா! பெரி யாரைக் கேள் என்கிறாயா? புரிந்து கொண்டேன் அண்ணா, புரிந்துகொண்டேன்!

- மு. கருணாநிதி, ("மறவன் மடல்" -4-10-1970)

புரிகிறதா? பூணூல்களுக்கும், அவர்களின் அடிமை களுக்கும் சிலை வைத்தால் சிலிர்த்து மகிழ்வார்கள். பார்ப்பனர் அல்லாதாருக்கு சிலை எழுப்பினால் மட்டும் அங்கமெல்லாம் வியர்த்து வெலவெலத்துப் போய் விடுவார்கள்.

படேல் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குச் சாய் காலாக இருந்தவர். சிவாஜியோ ஆரியத்துக்குக் கொட்டியழுது கஜானாவே போண்டியாகிப் போனவர் - அதனால் தான் சூத்திரர்களாக இருந்தாலும் இவர்களுக்குச் சிலை -புரிகிறதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner