எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.5 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடுத்த சில வாரங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்ட அதிமுக்கியமான வழக்குகளில் அவர் தீர்ப்பு வழங்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. அவற்றில் அயோத்தி பிரச்சினை, ஆதாருக்கு எதிரான வழக்குகள், ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அனுமதி கோரும் மனுக் கள், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது உள் ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

அந்த வழக்குகள் அனைத் தும் மொத்த நாட்டின் கவனத் தையும் ஈர்த்துள்ளவை என்ப தால், அவற்றின் மீது எத்தகைய தீர்ப்பை தீபக் மிஸ்ரா அளிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

65 வயதை எட்டப் போகும் தீபக் மிஸ்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன் றத்தின் 45-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். நீதிபதி கர்ணனுக்கு சிறைத் தண்டனை விதித்தது, திரை யரங்குகளில் தேசியகீதத்தை கட்டாயமாக்கியது, பசு பாது காவல் என்ற பெயரில் படு கொலை செய்யப்படுவதை கடுமையாக கண்டித்தது என பல சிக்கலான வழக்குகளை அவர் தலைமையிலான அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. மற்றொரு புறம், சக நீதிபதிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகி சர்ச்சைக்கும் ஆளானார் தீபக் மிஸ்ரா. வழக்குகளை ஒதுக்கு வதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் மீது உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றம்சாட்டியது அப்போது பரபரப்பு செய்தியானது.

அந்தக் குற்றச்சாட்டுகளை பெரிதாக பொருட்படுத்தாத தீபக் மிஸ்ரா, தொடர்ந்து பல் வேறு வழக்குகளை விசாரித்தார். ராமஜென்ம பூமி எனக் கருதப் படும் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் எவருக்குச் சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை அவரது தலைமையிலான அமர்வே விசாரித்து வருகிறது. இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி அதன் மீதான தீர்ப்பை தீபக் மிஸ்ரா அமர்வு ஒத்திவைத்தது.

அதேபோன்று, ஆதாரை அரசு கட்டாயமாக்கியது செல் லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக் களையும் அவர் தலைமையிலான அமர்வு விசாரித்து கடந்த மே 10-ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஓரினச்சேர்க்கையை குற்ற மாக வரையறுக்கும் அரசியல் சாசனப் பிரிவு 377-ஆவது விதியை ரத்து செய்யக் கோரிய வழக்கும் தீபக் மிஸ்ரா எழுதப்போகும் தீர்ப்புக்காக காத்திருக்கிறது.

இதைத் தவிர, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயதிலான பெண் களுக்கு அனுமதி மறுக்கப்படு வது தொடர்பான வழக்கு, எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் வழக்கு, குற்றவழக்கில் சிக்கிய அரசியல் வாதிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றிலும் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வரும் அக் டோபர் 2-ஆம் தேதியுடன் தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ளார். இன்னும் 20 நாள்களே அவர் நீதிமன்றத்தில் பணியாற்றப் போகிறார். அதற்குள்ளாக இந்த அதி முக்கிய வழக்குகள் அனைத்தின் மீதும் தீர்ப்பளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சவாலை எதிர்கொள்ள தீபக் மிஸ்ரா ஆயத்தமாக இருப்ப தாகவே நீதித் துறை வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner