எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 5 -இந்தியாவில் பெய்து வரும் பருவ மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 10 மாநிலங்களில், கேரளாவில் 488 பேர் உட்பட 1400 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசர உதவி மய்யம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவித்திருப்பதாவது: நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கேரளாவை புரட்டி எடுத்தபெருவெள்ளத்தில் 488 பேர் உயிரிழந் துள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14.52 லட்சம் மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தென் மாநிலங்களில் 57,024 எக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்திருக்கின்றன.

பருவமழை பாதிப்பினால் உத்தரப்பிரதேசத்தில் 254க்கும் மேற்பட்டோரும், மேற்குவங்கத்தில் 210 பேரும், கருநாடகாவில் 170 பேரும், மகாராட்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 50 பேரும், உத்தர் கண்டில் 37 பேரும், ஒடிசாவில் 29 பேரும், நாகலாந்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.10 மாநிலங்களில் மழையினால் ஏற்பட்ட விபத்துகளில் 386 பேர் படுகாயம்அடைந்துள்ளனர்.

கேரளாவில் 15 பேரும், உத்தப்பிரதேசத்தில் 14 பேரும், மேற்குவங்கத்தில் 5 பேரும், உத்தர் கண்டில் 6 பேரும், கருநாடகாவில் 3 பேரும் என 43 பேர் காணாமல் போயிருக் கின்றனர். ஒடிசாவில் 30 மாவட்டங்களையும், மகாராஷ்டிராவில் 26 மாவட்டங்களையும், அசாமில் 25 மாவட்டங்களையும், உத்தரப்பிரதேசத்தில் 23 மாவட்டங்களையும், மேற்கு வங்கத்தில் 23 மாவட்டங்களையும், கேரளாவில் 14 மாவட்டங் களையும், உத்தர்கண்டில் 13 மாவட்டங்களையும், கருநாட காவில் 11 மாவட்டங்களையும், நாகலாந்தில் 11 மாவட்டங் களையும், குஜராத்தில் 10 மாவட்டங்களையும் வெள்ளம் கடுமையாக தாக்கியுள்ளது.அசாம் மாநிலத்தில் 11.47 லட்சம் மக்களையும், 27,964 ஹெக்டேர் விளைநிலங்களையும், மேற்குவங்கத்தில் 2.28 லட்சம் மக்களையும் 48,552 ஹெக்டேர் விளைநிலங்களையும், உத்தரப்பிரதேசத்தில் 3.42 லட்சம் மக்களையும், 50,873 ஹெக்டேர் விளைநிலங்களையும், கருநாடகாவில் 3.5 லட்சம் மக்களையும், 3,521 எக்டேர் விளைநிலங்களையும் பருவமழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளம் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner