எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.5 டில்லி யில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, சாமியார் கைது செய்யப் பட்டார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண், தன் மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால், நபே பகத், 42, என்ற,   சாமியாரிடம், அவனை சமீபத்தில் அழைத்துச் சென்றார். தன், 15 வயது மகளையும், உடன் அழைத்துச் சென்றார். அப்போது, அந்த சிறுமிக்கு,   சாமியார் நபே பகத் பாலியல் தொல்லை கொடுத் துள்ளார்.

'இது குறித்து வெளியே கூறினால், கொலை செய்து விடுவேன்' என, மிரட் டினார். இது குறித்து, தகவலறிந்த சிறுமியின் உறவினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நபே பகத்தை கைது செய்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner