எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் டவுண், 60 சேதுரஸ்தாவில் வசிக்கும் கந்தசாமிபிள்ளை குமாரர் பாலசுப்பிரமணியன் கொடுத்த தகவல்படி கொடுக்கும் பொது அறிவிப்பு

31/05/1940 நாளிட்ட நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், திருத்துறைப்பூண்டி சார்பதிவாளர் அலுவலக ஆவண எண்.846/1940 ஆவணத்தின்படியும், அந்த ஆவணத்தில் கண்ட S.K.M. Subbaiah Pillai & Son  என்ற தாய் நிறுவனத்தின், கிளை நிறுவனங்களாக பல்வேறு பெயர்களில் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் கிடைக்கப்பெற்ற வருவாயிலிருந்தும் தமிழ்நாட்டிலும், கர்நாடகா மாநிலத்திலும், வெளிநாடுகளிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள், பின்கண்ட ஏகப்பிரிவினை ஆகாத சொத்துக்கள் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வேதாரண்யம் பட்டிணம், வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, ஆகிய கிராமங்களிலும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேலப்பெருமழை, எடையூர் ஆகிய கிராமங்களிலுள்ளதும், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுக்கா, இராமநாதபுரம் கிராமங்களிலுள்ளதும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சார்பதிவகத்துக்குட்பட்ட, தையூர், காளவாக்கம், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், ஸ்ரீ பெரும்புத்தூர் சார்பதிவகத்துக்குட்பட்ட, ஸ்ரீ பெரும்புத்துர், போரூர், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், நகரியத்தில் உள்ளதும், கர்நாடகா மாநிலம், பெங்களூர் மாநகரில் உள்ளதும் ஆகிய சொத்துக்கள் மற்றும் USA Vநாட்டில் வாங்கப்பட்ட சொத்துக்களும் அடங்கும். பல்வேறு மோசடியான ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனது கட்சிக்காரர் தகப்பனார் மா.கந்தசாமிபிள்ளையும் அவரது மனைவியார் திருமதி. கே. சிவயோகத்தாச்சியும் ஏற்படுத்திய ஆவணங்களின்படி எனது கட்சிக்காரர் அவரது சகோதரர் கே. மாரியப்பன் ஆகிய இருவரும் சரிபாதி சமவீதமாய் அடையவேண்டிய ஏகப்பிரிவினையாகாத பொது குடும்ப சொத்துக்களை திரு. கே. மாரியப்பனோ அவரது வாரிசுகளோ, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ விற்கவோ, அடமானம் செய்யவோ பாகப்பிரிவினை செய்துகொள்ளவோ பொது அதிகாரப் பத்திரம் எழுதி வைக்கவோ, பரிவர்த்தனை செய்துகொள்ளவோ எவ்வித உரிமையும் இல்லை. ஆகவே, என் கட்சிக்காரருக்கு சொந்தமான பொது சொத்துக்களை பாகப்பிரிவினை ஏற்படுவதற்கு முன்பு யாராவது எனது கட்சிக்காரர் சம்மதமின்றி எவ்வித ஆவணங்களும் ஏற்படுத்திக்கொள்ளுவது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு உட்படவேண்டிய செயலாகும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

வ.அரசு பி.ஏ.பி.எல்.,

வழக்கறிஞர்

நாள்: 04-09-2018

இடம்: திருத்துறைப்பூண்டி

Banner
Banner