எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருநெல்வேலி, செப். 6-- இது வரை தாமிரபரணியில் மகா புஷ்கரம் எனும் மத விழா நடந்ததற்கான ஆதாரம் ஏது மில்லை என்றும் இந்த விழா நடந்தால்தாமிரபரணி ஆறு சுற்றுச் சூழலும் மிக மோசமா கப் பாதிக்கப்படும்; மாசுபாடு அதிகரிக்கும் என்றும் எனவே மகாபுஷ்கரம் எனும் மதவிழாவை அரசுவிழாவாக நடத்தகூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், முதலமைச்சர் ஆட்சியர் ஆகி யோருக்கு மனு அனுப்பியுள் ளார். மனுவின் விபரம் வரு மாறு: தாமிரபரணியில் எதிர் வரும் அக்டோபர் மாதம் மகா புஷ்கர் எனப்படும் மதவிழா நடக்க இருப்பதாக பத்திரிகை களில் தொடர்ந்து செய்தி வெளிவருகிறது. அச்சமயத்தில் பல லட்சம் பேர் தாமிரபரணி யில் நீராட இருப்பதாகவும், ஊர்வல ங்கள் நடத்த இருப்ப தாகவும், இதனை அரசு விழா வாக நடத்த வேண்டுமென்றும் அச்செய்திகள் கூறுகின்றன. இது குறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதற்காக தங்களது மேலான கவனத்திற்கு கீழ்க்கண்ட விசயங்களை கொண்டுவர விரும்புகிறோம்.

முதலில் தாமிரபரணியில் இது போன்ற விழா நடந்து இருப்பதற்கான எந்த ஆதார மும் இல்லை. 144 ஆண்டுக ளுக்கு முன்பு, அதாவது 1874 இல் தாமிரபரணியில் மகாபுஷ் கர் நடந்ததாகச் சொல்லப் படுகிறது. ஆனால் 1881இல் வெளிவந்த கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம் எனும் நூலில் இது போல ஒரு விழா நடந்ததாக எந்த ஆதார மும் இல்லை. மக்கள் மத்தி யில் தவறாக பரப்பப் படும் செய்தியை தாங்கள் தடுக்க வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம். கழிவுநீராலும், குப் பைகளை கொட்டுவதாலும் தாமிரபரணி மாசடைந்தே உள் ளது. பல ஆயிரம்மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கடும் உழைப்பால்கரையோரங் கள் சீரமைக்கப் பட்டன. அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து மாசற்ற நதியாக மாற்ற வும், கரையோரங்களை செம் மைப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும். விழாக்கள் இதற்கு உதவிகரமாக அமையாது.

இந்தியா இறையாண்மை மிக்க சமயச்சார்பற்ற நாடு என்ற கொள்கையிலிருந்து அடி பிறழக் கூடாது எனவும் கூற விரும்புகிறோம். மத நடவடிக் கைகளில் அரசு பங்கேற்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப் புகள் உள்ளதை யும் நினை வூட்ட விரும்புகிறோம்.

மேலும் விழாவிற்கு அரசு நிதி ஏதும் பயன்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

மேலும், தாமிரபரணி நமது தமிழ்ச்சமூகத்தின் மிக தொன்மைமிக்க பண்பாட்டு அடையாளம். நமது தொல் சமூகப் பண்பாடு சாதி, மத பேதமற்றது. ஆதிச்சநல்லூர், கீழடி அகழ்வாராய்ச்சிகள் அதனையே மெய்ப்பித்துள்ளன. தாமிரபரணி கரையோரங்களில் பல மதங்களை பின்பற்றுவோர் பல லட்சம் பேர் வேற்றுமை பாராமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமைக்கு பங்கம் வராமல் தடுப்பதும், மக்கள் ஒற்று மையை பாதுகாப்பதும் தேசப் பற்றுமிக்க மக்கள் மற்றும் அரசு நிர்வாகத்தின் கடமை யாகும். எனவே, தாமிரபரணி நதியினையும், சுற்றுச்சூழலை யும், மக்களின்நல்லிணக்க வாழ்வு முறையினையும் கருதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner