எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 6- உலகளாவிய உயர்தொழில்நுட்பத்தில், உன் னத நிலையைக் குறி வைத்துத் தயாரான “மராஸ்ஸோ” (Marazzo) என்ற வாகனத்தை மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தமிழகத்தில் 4.9.2018 அன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் அதிர்வு இல்லாத மென்மையான பயணத்தை வழங்கவல்லது. எளிமையாகக் கையாளும் வசதியுள்ள இந்த வாகனத்தின் உள்ளே, என்ஜின் ஒலிகூட உட்புகாத வகையில் அமைதி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

'மகிந்திரா ஆட்டோமோட் டிவ் நார்த் அமொக்கா' மற்றும் 'மஹிந்திரா ரிசர்வ் வேலி' என்ற இரு நிறுவனங்களின் முதல் கூட்டு முயற்சியான இதில், 'மேம்பாடு' என்ற தத்து வத்துக்கு மராஸ்ஸோ செயல் வடிவம் தந்துள்ளது என இதன் அறிமுக நிகழ்வில் இக்குழுமத் தின் செயல் தலைவர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.


ஜி.எஸ்.டி., இணைய வழி ரசீது குறித்து 11-இல் பயிற்சி

சென்னை, செப். 6- சரக்கு -சேவை வரி (ஜி.எஸ்.டி.), இ-வே பில் எனப் படும் இணைய வழி ரசீது ஆகியன குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் 11 -ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தி வருமாறு:

தொழில்முனைவோர்களுக்காக ஜி.எஸ்.டி., இணைய வழி ரசீது ஆகியவை குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் 11 -ஆம் தேதி நடத்தப் படுகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தொழில் முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் இந்த வகுப்பு நடத்தப்படும். இதற்கு நேரிலோ அல்லது இணையதளம் மூலமா கவோ முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களை, 044-2225 2081, 2225 2082, 88254 16460 மற்றும் 86681 02600 ஆகிய தொலைப் பேசி எண்க ளிலோ, www.editn.in என்ற இணையதளத்திலோ பெறலாம்.


 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner