எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடக சிறப்புப் புலனாய்வுக்குழு தகவல்

பெங்களூரு, செப்.6 -கவுரி லங் கேஷைப் போல, மேலும்34 எழுத்தாளர்களையும், பகுத்தறி வாளர்களையும்கொலைசெய் வதற்கு இந்துத்துவாகும்பல் சதித் திட்டம் தீட்டியிருப்ப தாக கருநாடக சிறப்புப் புல னாய்வுக்குழு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தபகுத்தறிவாளர்நரேந் திர தபோல்கர், இடதுசாரி எழுத்தாளர்கள் கோவிந்த் பன் சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் அடுத்தடுத்துதுப்பாக்கியால் சுட்டுப்படுகொலைசெய்யப் பட்டனர். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப் படாத நிலையில், நான்காவது நபராக,கருநாடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமானகவுரி லங்கேஷ், அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக் கொல் லப்பட்டார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எனினும் கருநாடக சிறப்புப் புலனாய் வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, இதுவரை 60 பேருக்கும் மேற்பட்ட-இந்துத்துவாபயங் கரவாதிகளை கைது செய்துள் ளனர். இவர்களில் பரசுராம் வாக்மோர் என்பவர், லங் கேஷை கொன்றது தான்தான் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கரு நாடகாவைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் மகாராஷ்டிரா மற் றும் கோவாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு, சனா தன் சன்ஸ்தா உள்ளிட்ட இந் துத்துவ அமைப்புக்களால் மூளைச்சலவைசெய்யப்பட் டவர்கள் என்பதும் விசாரணை யில் உறுதியாகி உள்ளது.மேலும், இவர்களிடமிருந்து கைப்பற் றப்பட்ட டைரி ஒன்றில் நாடு முழுவதும் உள்ள 34 எழுத் தாளர்களை, இவர்கள் கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. குறிப் பாக, கருநாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கிரிஷ் கர்நாட், நிதுமாமிதி மடத்தைச்சேர்ந்த சென்னமாலாசாமி,பகுத்தறி வாளர்கள் கேஎஸ். பகவான் மற்றும்நரேந்திரநாயக் ஆகிய நால்வரை ஒரே நாளில் கொல்லவும் இந்துத்துவ பயங் கரவாதிகள் திட்டமிட் டிருந்தது தெரியவந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner