எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.6 ரூ. 4. 2 லட்சம் கோடி செலவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:

நாட்டின் விமானப் போக்குவரத்து துறை உலக அளவில் வளர்ச்சியடைந்து வரும் துறையாக உள்ளது. கடந்த 50 மாதங்களாக போக்குவரத்து வளர்ச்சி தொடர்ந்து இரண்டு இலக்கத்தில் உள்ளது. ரூ. 4. 2 லட்சம் கோடி செலவில் 100 விமான நிலையங்களை அடுத்த 10-15 ஆண்டுகளில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விமான நிலையங்கள் அரசு-தனியார் கூட்டு பங்களிப்பின் மூலம் உருவாக்கப்பட உள்ளது. மேலும், விமானத்தில் சரக்கு ஏற்றி செல்வதற்கான கொள்கையையும் அரசு தயாரித்து வருகிறது என்று அவர் கூறினார்.

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, சந்தை மதிப்பில் உலகின் 3ஆவது பெரிய விமானப் போக்கு வரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் மாணவர்கள் கல்விச் சுற்றுலா

சென்னை, செப்.6 மெட்ரோ ரயில்களில் கல்விச் சுற்றுலாவாக ஜூன் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை 15,000 மாணவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை நகரில் மெட்ரோ ரயில் தொடர்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக மாதம்தோறும் கல்விச் சுற்றுலாவை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும், ஏஜி டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது மெட்ரோ ரயிலின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்கப்படுகின்றன.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை 15,000 மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றதாகவும், ஆகஸ்ட் மாதத்தில், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு பயன் அடைந்துள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner