எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றம் அரிய தீர்ப்பு

புதுடில்லி, செப் 7 கோவில்களில் பார்ப்பன அர்ச்சகர்களின் தவறான பாலியல் உற வுகள் குறித்து எழுதப்பட்ட மீசா' நாவலை தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் இந்துத்துவ அமைப்புகள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

'மீசா' என்ற நாவல் முன்னணி மலையாள இதழான மாத்ருபூமி'யில் தொடராக வெளிவந்தது. இந்தத் தொடரை ஒன்று சேர்த்து நாவலாக வெளியிட அதை எழுதிய எஸ்.ஹரீஸ், பதிப்பகம் ஒன்றிற்கு ஒப்புதல் அளித்தார். இது அதனைத் தொடர்ந்து மேலும் பல தகவல்களை ஒருங்கிணைத்து நாவல் வெளியானது.

இந்த நாவலில் கோவில்கள், பார்ப் பனர்கள் குறித்து மோசமான கருத்துகள் உள்ளதாகக் கூறி பாஜக, விசுவ இந்து பரிஷத், ஹிந்து சுரக்ஷா சமிதி, இந்து ஜன ரக்ஷன வேதிகா, யோகசீமா உள் ளிட்ட பல இந்து அமைப்புகள் போராட் டம் நடத்தின.

அதில் ஒரு இடத்தில், கோவில்களுக்கு செல்லும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து வாசனை பொருள்களான சந்த னம், ஜவ்வாது போன்றவற்றைப் பூசிக் கொண்டும், தலையில் மணமுள்ள பூக்களை சூடிக்கொண்டும், அலங்காரத் திற்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டும் செல்கிறார்கள். இவ்வாறு செல்வபவர்களைப் பார்த்து, கோவிலில் உள்ள பூசாரிகளுக்கு காம உணர்வு ஏற்படுகிறது. அதனால் கோவில்களில் பாலியல் தொடர்பான நிகழ்வுகள் நடை பெறுகிறது.

பார்ப்பன அர்ச்சகர்களும் இறை வனின் இடத்தில் தங்களை அர்ச்சகர் களுக்கு ஒப்படைப்பதில் தவறில்லை என்று கூறுவதாக உள்ளது.  மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் அவர்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தால், அவர்களை பார்ப்பன அர்ச்சகர்கள் கோவிலில் நுழைய அனு மதிப்பதில்லை என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது போல் உள்ளது.

இந்துத்துவ அமைப்பினரின் மிரட் டல் மற்றும் போராட்டம் காரணமாக இந்த நாவல் வெளியிடப் போவதில்லை என்று எழுத்தாளர் ஹரீஸ் கூறியிருந்தார். ஆனால், நாவலைப் பதிக்க உரிமம் பெற்ற மாத்ருபூமி'யின் பதிப்பகமான டிசி பதிப்பகம் இதை வெளியிடுவதில் உறுதியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த நாவலில் இந்து அர்ச்சகர்களையும், பெண்களையும் தவறாக சித்தரிப்பதாகக் கூறி டில்லியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உச்சநீதி மன்றத்தில் நாவலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ராமகிருஷ்ணன் அளித்த மனுவில்,  புத்தகத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் நடக்கும், உரையாடல்கள் பெண்களை பாலியல் பொருளாக சித் தரிக்கின்றன. இது குழு வன்முறையை தூண்டிவிடக் கூடும். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும் என குறிப் பிட்டிருந்தது.

இந்த வழக்கு தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஒரு புத்தகத்தை துண்டு துண்டாக வாசித்து விட்டு குறை கூடக்கூடாது. முழுவதுமாக வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், எழுத்தாளர்களின் சுதந்திர மான கற்பனையை கட்டுப்படுத்த முடி யாது என்றும், இலக்கிய படைப்புகளை தடை செய்ய இயலாது என்றும் நீதிபதி கள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கருத்து தெரிவித்த நீதிபதி சந்திரசூட், இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கிறீர்கள், இணைய காலத்தில் இதை ஒரு பிரச்சினையாக மாற்றுகிறீர்கள்.

இதை மறந்துவிட்டால் நன்றாக இருக்கும்  என்று தெரிவித்தார். மாநில அரசு ஏற்கெனவே இந்த நாவலை வெளியிட எந்தத் தடையும் விதிக்க முடி யாது என்று கூறியுள்ளது. இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது,

இது போன்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்களை மாநில அரசால் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளார்.