எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப்.7 கருநாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசி ரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் வன்முறை வழக்கு, கார் ஓட்டுநர் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட் டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகி றார்கள். தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் நித்யா னந்தா தாக்கல் செய்த மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட் டது. மேலும் நித்யானந்தா  மீதான வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட நீதிமன் றத்துக்கு கருநாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பிறகு, நித்யானந்தா மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நித்யானந்தா  ஆஜராகி இருந்தார். அதன்பிறகு, 2 முறை நடந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றும் நித்யா னந்தா  மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்குரை ஞர், நித்யானந்தா வடமாநிலங் களில் ஆன்மிக சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜ ராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

தொடர்ந்து 3 முறை நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாத தால் நித்யானந்தாவுக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை வரு கிற 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner