எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், செப்.7 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் நடைபெற்ற மாநில அளவிலான பெரியார் தொழில்நுட்பக் கருத் தரங்கு 31.08.2018 அன்று காலை 10 மணியளவில் இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  தமிழகத்தில் பல்வேறு பாலிடெக்னிக்களிலிருந்தும் மார் 150 மாணவர்கள் கலந்துக் கொண்டு தயாரித்து அனுப்பிய 120 தொழில் நுட்பக் கட்டுரை களிலிருந்து 98 கட்டுரைகள் கருத்தரங்கில் வாசித்தளிக்க தேர்ந் தெடுக்கப்பட்டன. பல்வேறு தலைப்புகளை கொண்ட 5 துறை களில் கட்டுரைகளை மாண வர்கள் வாசித்தளித்தனர்.

அன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற கருத் தரங்கு நிறைவு விழாவில் தலை மையுரையைற்றிய இக்கல்லூரி முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா அவர்கள் இந்த கருத்தரங்கு மாணவர்களின் திறன்களப் பகிர்ந்துக் கொள்ளும் இடமாக வும், மாணவர்களின் திறன்கள வளர்த்துக் கொள்ளும் வாய்ப் பாகவும் அமைந்துள்ளது என்று கூறினார். விழாவில் தலைமை விருந்தி னாராக கலந்துக்கொண்டு நிறை வுரையாற்றிய  ய.பாரதிராஜா, (பொதுமேலாளர், மாருதி கம்பெனி குருப்ஸ், தஞ்சாவூர்)  இதுபோன்று கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு போட்டி களில் கலந்து கொண்டு, திறன்கள வளர்த்து தொழில்நுட்ப சமுதா யத்தை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

விழாவின் முன்னதாக இப் பாலிடெக்னிக் கல்லூரி முதன் மையர் டாக்டர் அ.ஹேமலதா அவர்கள் வரவேற்புரை வழங் கினார். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் கட்டுரை வாசித்தளித்த மாணவர் களுக்கு முறையே முதல் மற்றும் இரண்டு பரிசுகளோடு ரூ. 2000  மற்றும் ரூ. 1500 ஆகிய பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ் வழங்கப் பட்டன. மேலும் இக்கருத்தரங் கில் விழா மலர் குறுந்தகடு தலைமை விருந்தினர் ய.பாரதிராஜா அவர் களால் வெளியிடப்பட்டது. இக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் உ.பர்வீன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார். இக்கல்லூரி கணினியியல் துறை பேராசிரியர் கோ.குமார் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner