எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.7 கடந்த மாதம் கேரளாவில் கனமழை பெய்ததை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேசிய பேரிடர் மேலாண் மை குழு அணையின் நீர் மட் டத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் கூறியுள்ள கேரள அரசு, நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலி யுறுத்தி இவ்வழக்கில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீரை தமி ழகம் திறந்துவிட்டதும் வெள்ள சேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்தது.

முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை ஆகஸ்ட் 31ஆ-ம் தேதி வரை 139.99 அடியாக பரா மரிக்கலாம் என துணைக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் எனவும், அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையிலான துணைக்குழு தொடர்ந்து கண்காணிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி கள், வழக்கு விசாரணையை செப் டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இன்று மீண்டும் மனு விசாரிக்கப்பட்ட நிலையில், மனு வில் சர்வதேச நிபுணர் குழுவை கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner