எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், செப். 7- பாகிஸ் தானில் உள்ள அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவர் மொகமது இப்ரார் கலீல். இவர் நேற்று பெஷாவர் மாகாணத்தில் டெக் கால் பகுதியில் தனது உறவி னர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் அங்கு வந்த நபர்கள் சிலர் கலீலை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

காயமடைந்த அவரையும், உறவினர் அர்ஷத்தையும் மருத்துவமனையில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.  தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெஷாவரில் பட்டப்பகலில் அவாமி தேசிய கட்சி பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கடந்த ஜூலையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் அவாமி தேசிய கட்சி பிரமுகர் ஹரூண் பிலோர் உள்பட12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் கத்தாரை விட்டு எளிதாக நாடு திரும்ப சட்டதிருத்தம்

தோஹா, செப். 7- வளைகுடா நாடான கத்தாரில் இந்தியர்கள் உள்பட அதிக அளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த காரணங்களுக்காக தொழி லாளர்கள் நாடு திரும்புவதற்கு, எளிதில் விசா அனுமதி கிடைக்காத வண்ணம் சட்டங்கள் அங்கு இருந்தது.

இதனால் கத்தாரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள், சொந்த நாடு திரும்புவது கடினமாக இருந்தது. இந்நிலையில், கத்தாரின் குடி அமர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது.

அதன்படி கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற, அவர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்ற சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டில் வரும் 2022-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடருக்காக, அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner