எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 7- புதிய வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, புதிய விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கான வரைவு நகல் ஒன்றை அது அண்மையில் வெளியிட்டது.

இந்த வரைவு நகல் குறித்து 5.9.2018 அன்று சென்னையில் நடைபெற்ற செய் தியாளர் சந்திப்பின்போது தமிழ் நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் வீடு கட்டுவோர் சங்கங் களின் கூட்டமைப்பு மற்றும் மெட்ரோ ஃபிளாட் புரோ மோட் டார்ஸ் அமைப்பு ஆகியவை தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது விதிகளுக்கான வரைவு நகலையும், அதன் நோக்கத்தை யும் வரவேற்றுள்ளன.

அதே வேலையில், கட்டுமா னப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாத் தரப்பினருக்கும் பலன் கிடைக்க உதவும் வகையில், அதில் சில மாற்றங்களைச் செய்ய, மாநில அரசு முன்வர வேண்டும் என கோரியுள்ளன. மேலும் இந்த வரைவு நகல், பெரு நிறுவன கட்டுனர்களுக்கு, அதாவது கார்ப் பரேட் கம்பெனிகளாக இப்பணி யில் ஈடுபட்டுள்ளவர்களுக்கே சாதகமாக உள்ளது என தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் வீடு கட்டுவோர் சங்கங்களின்  கூட்டமைப்பின் மாநிலத் தலை வர் பி.மணிசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner