எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 7- விவோ புரோ கபடியின் 6-ஆவது சீசன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி சென்னை நேரு விளை யாட்டரங்கில் தொடங்குகிறது.

இதில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப் டன் அஜய் தாக்குர் தலைமை யில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் புரோ கபடி போட்டிக்கான தமிழகத்தின் முகமாக நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்கப் பட்டார்.

விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கூறுகையில், கபடி நம் தமிழர்களுடைய விளையாட்டு. நம் வரலாற் றோடும் பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்த ஒன்று. இந்த வருட புரோ கபடி சீசனில் விளையாடும் தமிழ் தலை வாஸ் அணியின் முகமாக இருந்து இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்ப தில் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.

நம் தமிழர்களுடைய விளையாட்டான கபடியை நாம்தான் மேம்படுத்தவேண் டும். கிரிக்கெட்டையும் தாண்டி  கபடி அனைத்து இடங்களையும் சென்றடைய வேண்டும். இம் முறை நானும் மைதானத்துக்கு வந்து போட்டியை கண்டுகளிப் பதுடன் வீரர்களை உற்சாகப் படுத்த உள்ளேன் என்றார்.

தமிழ்தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் கூறு கையில், ஆசிய விளையாட்டில் ஈரான் அணி 2010ஆ-ம் ஆண்டில் இருந்தே கடுமையாக போராடி வருகிறது. கடின உழைப்பும், விடா முயற்சியும்தான் அவர் களுக்கு வெற்றியை கொடுத் துள்ளது. எல்லா நேரத்திலும் எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது.

ஒட்டுமொத்த செயல்திற னுடன் செயல்படாததால் நாம் பின்னடைவை சந்திக்க நேரிட் டது. புரோ கபடியை பொறுத்த வரையில் கடந்த முறை தமிழ் தலைவாஸ் அணி கடைசி கட்ட நிமிடங்களில் தொழில் நுட்ப ரீதியாக சிறப்பாக செயல் பட தவறியதால் வெற்றி களை தவறவிட்டது. இம்முறை அதில் கவனம் செலுத்தி உள் ளோம். தமிழ் மக்கள் எங்க ளுக்கு முழுமையாக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்படு வோம் என்றார்.

20 பேர் கொண்ட தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத் தைச் சேர்ந்த சி.அருண், டி.கோபு, பிரதாப், ஜெயசீலன், பார்த்திபன் ஆகிய 5 பேர் இடம் பிடித்துள்ளனர்.

சென்னை நேரு விளை யாட்டரங்கில் வரும்அக்டோபர் 5ஆ-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner