எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சாங்வோன், செப். 7- உலகக் கோப்பை இளையோர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன நட்சத்திர வீரர் சவுரவ் சவுத்ரி சாதனையுடன் தங்கம் வென் றார். அதே நேரத்தில் அபி ஷேக் வர்மா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை தவற விட்டார்.

தென்கொரியாவின் சாங் வோனில் உலகக் கோப்பை இளையோர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சவுரவ் சவுத்ரி 581 புள்ளிகளு டன் தங்கம் வென்றார். கடந்த மாதம் நடைபெற்ற ஆசியப் போட்டியிலும் சவுரவ் தங்கம் வென்றிருந்தார்.

மேலும் சவுரவ், சிங், அன்மோல் ஆகியோர் அடங் கிய இந்திய அணி 1730 புள்ளி களுடன் வெள்ளி வென்றது. இதே பிரிவில் மூத்த வீரரான அபிஷேக் வர்மா 8-ஆம் இடத் தையே பெற்றதால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். போட் டியின் 5-ஆம் நாளான வியா ழக்கிழமை 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங் களை இந்தியா வென்றுள்ளது.

கொரியா, ரசியாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது. மகளிர் பிரிவில் அன்ஜூம் மொட்கில், அபூர்வி சந்தேலா ஆகியோர் மட்டுமே ஒலிம்பிக் போட் டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner