எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.7 உயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் இனி தேசிய தேர்வு முகமை தான் (என்.டி.ஏ.) நடத்தும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தனி அதிகாரம் படைத்த அமைப்பாக என்.டி.ஏ. உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் இதுவரை நடத்தப்பட்டு வந்த ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் என்.டி.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் (ஏஅய்சிடிஇ) சார்பில் நடத்தப்பட்டு வந்த சிமேட் என்ற மேலாண்மை கல்வி நுவுத் தேர்வு, ஜிபேட் என்ற மருந்தாளுநர் கல்வி நுழைவுத் தேர்வுகளும் என்.டி.ஏ. வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. படிப்படியாக மற்ற நுழைவுத் தேர்வுகளும் அந்த அமைப்பிடம் வழங்கப்பட்டு விடும்.

மாணவர்களின் வசதிக்காக நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழியில் நடத்தப்படுவதுடன், குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி மாணவர்களின் போக்குவரத்து சிக்கலை கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் மட்டுமின்றி, துணை - மாவட்டங்கள் அளவிலும் தேர்வு மய்யங்களை என்.டி.ஏ. அமைக்க உள்ளது.  இருந்தபோதும் நீட் தேர்வு மட்டும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வழங்கியுள்ள தேர்வுக்கான நடைமுறைகள், கட்டுப்பாடுகள் அடிப்படையிலேயே நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது ஆதார் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, செப்.7 அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக் கும் ஆதார் அடையாள அட்டை ஆணையம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:- ஆதார் எண் இல்லாத கார ணத்துக்காக, சில பள்ளிகள் மாணவர் களை சேர்க்க மறுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆதார் எண் இல்லாததற்காக, எந்த குழந்தையையும் பள்ளியில் சேர்க்க மறுக்கக்கூடாது என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அப்படி சேர்க்க மறுப்பது செல்லாது. சட்டப்படி அனுமதிக்கத் தக்கதும் அல்ல. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, வேறு அடையாள அட்டைகள் மூலம் அம்மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பள்ளியிலேயே ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner