எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- உச்சநீதிமன்றம் -

புதுடில்லி, செப்.7 ஒருவரு டைய உயிரை, பணத்தால் மதிப்பிட முடியாது. உயிர் என்பது விலைமதிப்பில்லாதது என, ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப் பீடு வழங்குவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பாலியல் பலாத்காரம் அல்லது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, இழப்பீடாக, குறைந்தபட்சம், அய்ந்து லட்சம் ரூபாயும், அதிக பட்சமாக, 10 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என, தேசிய சட்ட சேவை ஆணையம் நிர்ணயித்துள்ளது. இவ்வாறு குறைந்தபட்சம், அதிகபட்சம் நிர்ணயிக்காமல், குற்றத்துக்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்க வேண் டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை விசாரித்த, நீதிபதி கள், மதன் பி லோகுர், அப்துல் நசீர், தீபக் குப்தா அமர்வு கூறியதாவது: உயிர் என்பது, விலைமதிப்பு இல்லாதது; அதை பணத்தால் மதிப்பிட முடியாது. மனுதாரர் கூறுவது போல், ஒவ்வொரு வழக்கிலும், பாதிப்புக்கு ஏற்ப, பாதிக்கப் பட்டவருக்கு இழப்பீட்டை, நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியாது.

ஒரு குற்றத்தால் பாதிக்கப் பட்டவருக்கு, இவ்வளவு இழப்பு வழங்க வேண்டும் என்பதையும் நிர்ணயிக்க முடி யாது. இருந்தாலும், இதில், சில அடிப்படை கொள்கையை வகுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியது.

இது குறித்து, நான்கு வாரத் துக்குள் பதிலளிக்கும்படி, மத்திய அரசின் சார்பில் ஆஜ ரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிங்கி ஆனந்துக்கு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner