எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சண்டிகர், செப்.7 பஞ்சாப் பல்கலை. மாணவர் கவுன்சில் தலைவராக முதன் முறையாக மாணவி ஒருவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் பல்கலை. மாணவர் கவுன்சில் தேர் தல் நடந்தது. இதில் அப்பல்கலை.யில் விலங்கியியல் இரண்டாம் ஆண்டு மாணவி கனுப்ரியா (வயது 22) தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதில் கனுப்ரியா 719 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் மாணவி ஒருவர் முதன் முறையாக மாணவர் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துணை தலைவர், செயலாளர் பதவிக்கு இவரது தலைமையிலான அணியில் போட்டியிட்டவர் களே வெற்றி பெற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner