எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், செப். 8 கேரளா வின் முன்னணி தினசரி பத்தி ரிகையின் ஆசிரியர் வினோத் சந்திரனையும், அவரது மனை வியையும் அடையாளம் தெரி யாத நபர்கள் வீடு புகுந்து கடு மையாகத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தியுள்ளது. இவர் பார்ப் பனர்களின் தவறான பாலியல் நடவடிக்கைகளை குறித்து எஸ்.ஹரீஷ் என்பவர் எழுதிய நாவலை வெளியிட முன்வந்த பதிப்பகத்தின் ஆசிரியரும், கேர ளாவின் முன்னணி ஊடகமான ‘மாத்ருபூமி'யின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

‘மாத்ருபூமி' இதழின் முதன்மை ஆசிரியர் வினோத் சந்திரன் தனது மனைவியுடன் தாழே சோவா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். ‘மீசா' நாவல் தொடர்பான பிரச்சினை காரணமாக இவர் மீது ஏற்கெனவே இந்து அமைப் புகள் மிரட்டல் விடுத்து இருந் தன. இந்துத்துவ அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ‘மாத்ருபூமி' பத்திரிகை ‘மீசா' நாவலை நூலாக வெளியிடுவது என்றும், இது தொடர்பாக வழக்கு வந்தால் சந் திக்கவும் தயார் என்றும் கூறியி ருந்தது.

இந்த நிலையில் இந்துத்துவ அமைப்புகள் ‘மீசா' நாவலை வெளியிடுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் 6.9.2018 அன்று உச்ச நீதிமன்றமும் ‘மீசா' நாவலை வெளியிட தடைவிதிக்க முடி யாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.இதனைத் தொடர்ந்து மீண்டும் நாவலைப் பதிப்பிக்கும் பணி துவங்கியது. இந்த நிலையில் சந்திரன் தனது வீட்டின் கதவை சிலர்  உடைப் பதை உணர்ந்து வெளியில் வந்து பார்த்துள்ளார். உடனே அக்கும்பல் சந்திரனையும், அவரது மனைவி சரிதாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் வீட்டில் புகுந்து பொருட்களைக் கொள்ளையடித் துச் சென்றனர்.

இது தொடர்பாக பேட்டி யளித்த மலையாள ஊடகத் துறையினர் ‘‘இது ஊடகத் துறைக்கு விடுக்கப்பட்ட மிரட் டலாகும். இந்துத்துவ அமைப் புகள் ஊடகத் துறையினரை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அவர்கள் தங்கள் மீது பழி வராமல் இருக்க வீட்டில் கொள்ளை நடத்த நடந்த தாக் குதலாக இதைச் சித்தரித்து உள்ளனர்'' என்று கூறினர். கேரள முதல்வர் பினராயி விஜ யனும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கைது!

வேலூர் மண்டல நகர் அமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தபோது, லஞ் சம் வாங்குவதற்கு தனியாக அலுவலகம் நடத்திய வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner