எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.8 டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு  தினசரி ஏற்படும் இழப்பு ரூ.9 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கட்டண உயர்வுக்கு பிறகு அரசு பேருந்துகளை  30 லட்சம் பயணிகள் புறக் கணித்ததால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

அரசு பேருந்துகளுக்கான கட்ட ணத்தை கடந்த ஜனவரி மாதம் 20ஆ-ம் தேதி சராசரியாக 60 சதவீதம் வரை தமிழக அரசு  உயர்த்தியது.

இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிய அளவில் மாற்றம் செய்து அரசு அறிவித்தது.

இருப்பினும்  விரைவு, சொகுசு, ஏசி என பல வகை கட்டணங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை சிதிலமடைந்த  நிலையில்  இருப்பதால், அரசு பேருந்துகளைத் தவிர்த்து விட்டு, ரயில் போன்ற மாற்று போக்குவரத்தில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் கட்டண உயர்வுக்கு பிறகு அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2.10 கோடியில் இருந்து  1.80 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 30 லட்சம் பயணிகள் மாற்று போக்கு வரத்துக்கு மாறியுள்ளனர்.

வழக்கமாக பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு இருந்தாலும், அடுத்த சிலமாதங்களில் அந்த நிலை மாறிவழக்கமான நிலைக்கு பயணிகளின் எண்ணிக்கை வந்துவிடும். ஆனால்,இந்த முறை  சுமார் 30 லட்சம் பயணிகள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மீண்டும் திரும்பவில்லை என அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 3 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. கட்டண உயர்வுக்கு பிறகு அரசு எதிர்பார்த்த வசூல் கிடைக்க வில்லை.

அரசு போக்குவரத்து கழகங்களைத் தவிர்த்து மாற்று போக்குவரத்து வசதிக்கு மாறிய 30 லட்சம் பயணிகளும் மீண்டும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு திரும்பவில்லை.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணத்தால் செலவுகள் அதிகரித்துள்ளன. கட்டண உயர்வுக்கு முன்பு இருந்த தினசரி இழப்பு ரூ.6 கோடியில் இருந்து தற்போது ரூ.9 கோடியாக உயர்ந்துவிட்டது. பயணிகளை மீண்டும் ஈர்க்க புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், தற்போதுள்ள கட்டண முறையிலும் சிறிய அளவில் குறைக்க வேண்டும். அல்லது டீசலுக்கான மானியத்தை அரசு வழங்க முன்வர வேண்டும்’’ என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner