எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இளைஞர்களே, ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை தாருங்கள். ஜாதிக்கென்று தனி இரத்தப் பிரிவு இருக்கிறதா? விபத்து நேர்ந்தபோது உயர்ந்த ஜாதிக்காரன், உயர்ந்த ஜாதிக்காரன் இரத்தத்தையா தேடுகிறான்? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, தன் ஜாதி மக்களின் உறுப்புக்காகவா காத்திருக்கிறான்?

இளைய சகோதரர்களே! சொந்த ஜாதியில் திருமணம் செய்வதை தவிருங்கள். விதவைப் பெண்களை மணக்க மனதார விரும்புங்கள் - விவாக முறிவு பெற்ற பெண்களை மணம் முடிக்க முந்தி வாருங்கள்!

முதலில் தந்தை பெரியாரை வாசியுங்கள் - அதேநேரத்தில், வாசிப்போடு நிறுத்திவிடாமல் அடுத்தகட்டமாக  அதனை சுவாசியுங்கள் - அதுதான் உங்களையும், உங்களைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்தும் - அதில்தான் மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது - மனிதத்தன்மை இருக்கிறது - மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கும் - சக மனிதனை மதிக்கும் பண்பாடு இருக்கிறது என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

புதிதாக இயக்கத்திற்கு வந்துள்ள மாணவர்களை, இளைஞர்களை வரவேற்கிறேன். இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் விடுக்கும் நற்செய்தி (Message) இதுதான்!

- தமிழர் தலைவர் உரை (மன்னை, 8.9.2018)